பெற்றோர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! கால் எலும்பு முறிந்தது..
ஸ்ரீவைகுண்டம் அருகே பெற்றோர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் பொன்ராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் விவசாய தொழில் செய்து வருகிறார். ஆறுமுகத்தின் மூத்த மகள் அன்பு சந்தியா (வயது 15) கொங்கராயகுறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அந்தப் பள்ளியில் நன்றாக படிக்கக்கூடிய மாணவியாக இருந்து வருகிறார்.
இந்த மாதம் 26 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் கடந்த மாத பருவத்தேர்வில் அன்பு சந்தியாவின் மதிப்பெண் குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் சந்தியாவின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். உடனே சந்தியாவின் தந்தை ஆறுமுகம் சந்தியாவிடம் பொது தேர்வு வரவிருக்கிறது நீ நன்றாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கூறுகிறார்கள் என திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி அன்பு சந்தியா மதியம் இடைவேளை நேரத்தில் பள்ளி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே விழுந்து படுகாயம் அடைந்த சந்தியாவை அருகில் இருந்த ஆசிரியர்கள் மீட்ட கருங்குளம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மாணவி அன்பு சந்தியாவை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார்!! மெட்ரோ இரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ