சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் புகும் சிறுத்தைகள் அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி, கடந்த சில நாட்களாக கிராமவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் தான் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் பவானிசாகர் வனத்துறையினர் புதுப்பீர்கடவு கிராமத்தில் குப்புசாமி என்பவரது தோட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து, அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்து கண்காணித்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இன்று அதிகாலை கூண்டில் சிறுத்தை சிக்கி இருப்பது கிராம மக்களுக்கு தெரியவந்துள்ளது, இதனை உடனடியாக அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சிறுத்தையை கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். அந்த வகையில் அந்த சிறுத்தையை தற்போது காராச்சிகொரை கிராமத்தில் உள்ள வன கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்துள்ளனர். 


மேலும் படிக்க | காதலா, ஊடலா, கொஞ்சலா, கெஞ்சலா? இணையத்தை குழப்பும் பாம்புகளின் வைரல் வீடியோ 


மேலும் படிக்க | பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!! 



மேலும் படிக்க | திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 


இந்த நிலையில் இன்று இரவு நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா கிராமத்தை ஒட்டியுள்ள மங்களப்பட்டி என்ற அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை கூண்டிலிருந்து விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அத்துடன் பிடிபட்ட சிறுத்தைக்கு ஐந்து வயது இருக்கும் எனவும் அது ஆண் சிறுத்தை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கி இருப்பது புதுப்பிர்கடவு, காராச்சிகொரை கிராம மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. ,மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


கூண்டில் வாண்டெட் ஆக வந்து சிக்கிய ஆண் சிறுத்தையின் வீடியோவை இங்கே காணலாம்: