குடியிருப்புகளின் அருகே தந்திரமாக சுற்றித்திரியும் சிறுத்தைகள், கரடிகள்: Watch
குன்னூர் அருகே உள்ள கரிமறா கிராமத்தில் சிறுத்தைகள் மற்றும் கரடிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளன.
குடியிருப்புகளின் அருகே சிறுத்தைகள் மற்றும் கரடிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரிமறா கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசிகி நகர், பெரியார் நகர்,வசம்பள்ளம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் அன்மைக்காலமாக கரடி, காட்டெருமை, சிறுத்தை (Leopard), உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதியில் உலாவந்த இரண்டு சிறுத்தைகளும், அதனைத் தொடர்ந்து உலா வந்த மூன்று கரடிகளும் இங்கு உள்ள ஒரு பங்களாவில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது பகுதிமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளுக்கு நாள் இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிகள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத் துறைக்கு (Forest Officials) கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீப காலங்களில் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் காட்டுப் பகுதியைத் தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விலங்குகளின் நடமாட்டம் மக்களை பெரும் பிரச்சனைக்கு உள்ளாகுகிறது.
எனினும், இவற்றில் விலங்குகளையும் முழுமையாக குற்றம் கூற முடியாது. மிருகங்களின் இருப்பிடங்களை மனிதன் ஆட்கொண்டால் மனிதனின் இருப்பிடம் தேடி மிருகங்கள் வருவதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வெண்டும்.
ALSO READ | Leopard Hunt: 5 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது! சிக்கியது சிறுத்தை!
ALSO READ | Watch: தண்ணி காட்டும் சிறுத்தை; பாடாய் படும் வனத்துறையினர்
ALSO READ | யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் பலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR