கோவை: 5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை நள்ளிரவில் வெளியே வந்தபோது, சமயோசிதமாக செயல்பட்ட வன ஊழியர்கள் கூண்டிற்குள் சிறுத்தையை பிடித்தனர்
கோவை மாவட்டம் மதுக்கரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை கடந்த சில தினங்களாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
தப்பி வெளியேறிய சிறுத்தை, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கி கொண்டது. தகவலறிந்த வனத்துறையினர் (Forest Officials) சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.
சிறுத்த பதுங்கியிருந்த குடோனை சுற்றி வலை விரிக்கப்பட்டும், குடோனில் 2 வாயில்களிலும் இரண்டு கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
5 தினங்களாக வனத்துறையினர் காத்திருந்த போதிலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. கோவை வனத்துறையினரும் சிறுத்தை தானாக கூண்டில் வந்து சிக்கும் வரை பொறுமை காத்தனர்.
சிறுத்தை மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வராமல் இருந்த சிறுத்தைக்கு உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் இருந்ததால் உணவுக்காக குடோனில் இருந்து வெளியேற முயன்றது.
சிறுத்தை வெளியேறிய 6 வது நாளான நேற்று குடோன் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டு பகுதிக்கு சிறுத்தை வந்தது. பசியுடன் இருக்கும் சிறுத்தையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மிகுந்த கவனத்துடன் அதை கையாள வேண்டிய நிலையில், சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
ALSO READ | பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சுற்றிவளைப்பு
சிறுத்தை முழுமையாக கூண்டிற்குள் வந்தவுடன் கதவை மூட தயாராக காத்திருந்தவர்களின் பொறுமைக்கு பலன் கிடைத்தது.
சிறுத்தை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கூண்டிற்குள் வந்த நிலையில், வனத்துறை ஊழியர்கள் (Forest Officials) சமயோசிதமாக செயல்பட்டு கூண்டின் கதவை அடைத்ததால் சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர், வனத்துறையினரின் செயலை பாராட்டினார். சிறுத்தையை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வனத்துறையினர் திட்டமிட்டனர்.
மேட்டுப்பாளையம் பகுதிக்கு சிறுத்தையை கொண்டு சென்ற வனத்துறையினர் அதிகாலை நேரத்தில் சிறுத்தையை விடுவிக்க முடிவு செய்தனர். பொறுமையுடன் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, மயக்க ஊசி செலுத்தாமல் ஐந்து நாட்களாக காத்திருந்து அதை உயிருடன் பிடித்திருப்பது அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR