இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா. இவர்தான் நடத்தி வரும் தேவாலயத்திற்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கடந்தாண்டு இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜோசப் ராஜா மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று ஜோசப் ராஜா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவர் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார். நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து பாதிரியார் ஜோசப் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். 


மேலும் படிக்க | வேங்கைவயல் விவகாரம்: இதுவரை என்ன நடவடிக்கை... முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!


முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்புக்காக காத்திருந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பாதிரியார் ஜோசப் ராஜா உறவினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நீதிமன்ற வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி உத்தரவின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா தலைமையில் இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் பாதிரியார் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர் பெனடிக் ஆன்டோ. இவர் தேவாலயத்திற்கு வரும் பல இளம்பெண்களை மயக்கி, சல்லாபத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பாதிரியார் மீது எஸ்பியிடம் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அதில் பாதிரியாரின் ஆபாச படங்கள், வாட்ஸப் சாட்டிங், வீடியோக்கள் உள்ளிட்டவை சமர்பிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | AIADMK: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு - எடப்பாடி அணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ