வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


சென்னை அடுத்த சில நாட்களுக்கு, சில இடங்களில் மட்டும், மிதமான மழை பெய்யலாம். இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை முன் கூட்டியே இயல்பு அளவை எட்டியுள்ளது. வரும் 20ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் அதிகபட்சமாக 31டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகும். பல இடங்களில், வறண்ட வானிலையும், இரவில் பனியும் நிலவும். சென்னையில் லேசான துாறலுக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.