தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழு பொதுமுடக்கம்  (Lockdown) காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்தது. இதனால், மக்கள் சனி, ஞாயிறுகிழமைகளில் மளிகை, காய்கறி உட்பட அனைத்து கடைகளிலும் அதிகளவில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். அதே போல், டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் மதுப்பிரியா்கள் மதுக்கடைகள் (Tasmac) முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா். 


ALSO READ | வீட்டுக்கு மதுபானம் விநியோகம், இந்த மாநிலத்தில் புதிய ஆப் அறிமுகம்!


இந்நிலையில் ஞாயிறுகிழமை (நேற்று) ஒரே நாளில் தமிழகத்தில் (Tamil Nadu) டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ரூ.98.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் ரூ.97.62 கோடிக்கும், திருச்சியில் 87.65 கோடிக்கும், சேலத்தில் ரூ.76.57 கோடிக்கும், கோவையில் 67.89 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.


முன்னதாக சனிக்கிழமை அன்று தமிழகத்தில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் நேற்று அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரையில் ரூ.87.20 கோடி, சேலத்தில் ரூ.79.82 கோடி, கோவையில் ரூ.76.12 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதனால் டாஸ்மாக் மூலம் மட்டுமே தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் ஏற்பட்டுள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR