COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15:22 21-02-2018


கெஜ்ரிவாலை வரவேற்க மதுரை செல்ல வேண்டும் என்பதால் கமல் பரமக்குடியில் அதிகம் பேசவில்லை. மதுரையை நோக்கி பயணத்தை மேற்கொண்டார் கமல். 



15:05 21-02-2018


விழாவுக்கு நேரமாகிவிட்டதால் நான் மேடைக்கு வரவில்லை; உங்கள் அன்புக்கு நன்றி - சொந்த ஊரான பரமக்குடியில் வாகனத்தில் நின்றபடி மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு



13:31 21-02-2018


அப்துல்கலாம் நினைவிடத்தையடுத்து சொந்த ஊரான பரமக்குடி பேசுகிறார் கமல். 



13:31 21-02-2018


அப்துல்கலாம் நினைவிடத்தையடுத்து சொந்த ஊரான பரமக்குடி பேசுகிறார் கமல்.



13:28 21-02-2018


நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. 



11:51 21-02-2018


ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்கு கமல் வருகை. 



11:14 21-02-2018


தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன். 



10:55 21-02-2018


இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என்பது என் நம்பிக்கை- கமல் 


கலாம் பள்ளிக்கு செல்ல முயன்றதில் அரசியல் இல்லை என கமல் கூறினார். 


நான் பள்ளிக்கு செல்வதை தடுக்கலாம்- பாடம் படிப்பதை தடுக்க முடியாது: கமல் சந்திரபாபு நாயுடு நேற்று இரவு அழைத்து வாழ்த்தினார்- கமல் 


கொள்கையை விட மக்களுக்கு செய்வதை பட்டியலிடுங்கள் என்றார் சந்திரபாபு. 




10:49 21-02-2018


எளிமையான வீட்டில் இருந்து வந்த கலாம் முக்கியமான மனிதர்- கமல் 


மக்கள் முன்பாக கொள்கையை விளக்க வேண்டும். மக்கள் முன்பாக கொள்கையை விளக்க வேண்டும். கலாம் வீட்டுக்கு சென்றது மகிழ்ச்சி- அரசியல் அல்ல என கமல் தெரிவித்தார். 



10:45 21-02-2018


மீன் பிடிக்கவே முடியாத நிலையில் உள்ள மீனவர்களுக்கு அரசு ஏதும் செய்யவில்லை என மீனவ பிரதிநிதி தெரிவித்தனர். 


கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன் என கமல்ஹாசன்.


மீனவர்கள் பிரச்னையை கமல் கையில் எடுத்துள்ளதால் எங்களது பிரச்னை உலக அளவில் பேசப்படும்: மீனவ பிரதிநிதி. 



10:30 21-02-2018


நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கிறார். 



9:57 21-02-2018


ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் கமல் தங்களுடன் கலந்துரையாடாததால் மீனவர்கள் அதிருப்தி.



09:36 21-02-2018


மீனவர் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது என் கடமை. கடல் மேலாண்மை, சர்வதேச சட்டங்களை மதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். கேள்வி கேட்டால் பணிவுடன் பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை என கமல் மீனவர்கள் மத்தியில் உரையாடினார்.  



09:35 21-02-2018


கராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மஹாலில் மீனவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு.



9:29 21-02-2018


நன்றி தெரிவித்து ரசிகர்களுக்கு இ.மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளதாக கமல்ஹாசன் வீடியோ வெளியீடு. 


செல்லும் பாதை, செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து மற்றவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்- கமல்ஹாசன்  



09:26 21-02-2018


மீனவ அமைப்புகள், மீனவ சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் கமல் கச்சத்தீவு பிரச்னை குறித்து மீனவர்கள் கோரிக்கை கமலிடம் வைக்க உள்ளனர்.


சந்திப்பில் மீன்பிடித் தொழிலாளர்களும், மீனவ பெண்களும் பங்கேற்கின்றனர்.



09:17 21-02-2018


மீனவர்களை சந்திக்கிறார் கமல். 



09:08 21-02-2018


கலாம் பயணம் தொடங்கிய இடத்திலேயே என் பயணத்தை தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும் பிரமிப்பூட்டும் எளிமையை கண்டேன் -நடிகர் கமல்ஹாசன் ட்விட். 



09:04 21-02-2018


தன் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவித்த விவேக்கிற்கு நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்.



08:53 21-02-2018


கலாம் வீடு, கலாம் பள்ளியை பார்வையிட்ட பின்னர் ஓட்டலுக்கு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன். 



08:32 21-02-2018


மீனவர்களைச் சந்திக்க கணேஷ் மஹால் நோக்கி கமல்ஹாசன் பயணம். 



08:26 21-02-2018


கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியில் இருந்தபடியே பார்வையிட்டார் நடிகர் கமல்ஹாசன்.



08:22 21-02-2018


கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்கிறார் நடிகர் கமல்ஹாசன். 


பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு வெளியே இருந்து வணங்குவாதாக கமல் திட்டம். 



08:18 21-02-2018


கலாம் படித்த பள்ளிக்கு சென்று வெளியே இருந்து வணங்க போவதாக தகவல் வெளியாகியள்ளது.



08:16 21-02-2018
கலாம் இல்லத்துக்கு கமல் வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆராவாரம். 



08:08 21-02-2018


கலாம் வீட்டில் காலை உணவு அருந்திய கமல். 



07:53 21-02-2018


ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். 


கமலுக்கு நினைவு பரிசு தந்தார் கலாம் பேரன். 



07:51 21-02-2018


அப்துல் கலாமின் சகோதரர் முகமது  முத்துமீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார் கமல்ஹாசன்; கலாமின் பேரன் சலீம் கமலை வரவேற்று அழைத்துச் சென்றார்.



ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டலில் இருந்து அப்துல் கலாம் இல்லத்துக்கு புறப்பட்டார் கமல்ஹாசன்.