19:57 07-08-2018
திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

19:17 07-08-2018


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.


 




19:11 07-08-2018
இன்று 6.10 மணி அளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.




19:06 07-08-2018
இந்திய ஜனாதிபதி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழ் மொழியில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 



 




19:04 07-08-2018
இந்திய பிரதமர் மோடி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


 



 



 



 



 



19:03 07-08-2018


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



18:45 07-08-2018
பொன்விழா நாயகன் திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார்.


 




18:31 07-08-2018
24 மணி நேரத்திற்கு பிறகு தான் முடிவு சொல்லமுடியும் என நேற்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தற்போது கருணாநிதி எப்படி இருக்கிறார்? தொண்டர்கள் கதறல்!!


 




18:25 07-08-2018
அண்ணா அறிவாலயத்தில் இருந்த கருணாநிதியின் தந்தை மற்றும் அவரது தாயாரின் புகைப்படங்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது



18:17 07-08-2018
சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் தமிழக போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



18:06 07-08-2018
டாக்டர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் தோல்வியடைந்ததால், கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என காவேரி மருத்துவமனையின் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து, அவரை கான மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். 



17:58 07-08-2018
காவேரி மருத்துவமனையின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதிக்காக கண்ணீர் விட்டு கதறும் தொண்டர்கள்.


 



 



17:49 07-08-2018
டாக்டர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் தோல்வியடைந்ததாக காவேரி மருத்துவமனையின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, கருணாநிதியின் இல்லமான கோபாலபுரத்திற்கு அவரது குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர்.



17:40 07-08-2018
தமிழகம் முழுவதும் 6 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் மூட சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கருணாநிதியின் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை சரிசெய்ய டாக்டர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் தோல்வியடைந்ததாக காவேரி மருத்துவமனையின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




17:37 07-08-2018
காவேரி மருத்துவமக்கு வெளியே திரண்டிருக்கும் திமுக தொண்டர்கள் கண்ணீருடன் பிராத்தனை செய்கிறார்கள். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கண்ணீருடன் மருத்துவமனை வந்தார். சற்று நேரத்திற்கு முன்பு தான் துர்கா ஸ்டாலின் கண்ணீருடன் வெளியே சென்றார்.



17:31 07-08-2018
காவேரி ஆஸ்பத்திரிக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மருத்துவமனை அறிவித்துள்ளது. அவர்களின் அறிக்கைகள் படி, மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லவும், மருத்துவமனைக்கு உள்ளே வரவும் யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் எந்த நோயாளிகளும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. 



17:07 07-08-2018
அபாய கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் பரபரபப்பு தொற்றிக்கொண்டது.



17:02 07-08-2018
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனை சுற்றியும், 
கருணாநிதியின் கோபாலபுர இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.



16:36 07-08-2018
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது



 



16:29 07-08-2018
தற்போது தமிழக முதல்வருடன் டிஜிபி டி.கே ராஜேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 




16:15 07-08-2018


கருணாநிதி உடல் நலக்குறைவு மிகவும் மோசமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியுள்ளனர்.



16:02 07-08-2018
அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் பணியில் தயாரக இருக்குமாறு டிஜிபி உத்தரவு பிரப்பித்துள்ளார். தேவையான காவலர்களை பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்திக் கொள்ள உத்தரவு.




15:58 07-08-2018
கலைஞர் கருணாநிதி அவர்களின் மனைவி  ராஜாத்தி அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்!



15:44 07-08-2018


முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு விரைந்தார் தலைமை செயராளர் கிரிஜா வைத்திய்யாதன் விரைந்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!



15:28 07-08-2018


திமுக தொண்டர்கள் அதிகளவில் கூடுவதால், மருத்துவமனை வளாகத்தில் காவல்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது



15:18 07-08-2018 


முதல்வரை அடுத்து தலைமை செயலாளரையும் ஸ்டாலின் அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!



15:14 07-08-2018


மூச்சு தினறல் காரணமாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அவதிபட்டு வரும் நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்!



சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முக ஸ்டாலின் அவர்கள் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!


திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆ ராசா, முரசொலி செல்வம், ஐ பெரியசாமி ஆகியோ சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


15 நிமிட சந்திப்பிற்கு பின்னர் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு திரும்பினார்.


முன்னதாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு படை காவலர்கள் சுமார் 1200 குவிக்கப்பட்டுள்ளதும் மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!