Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 25, 2022)

Wed, 25 May 2022-3:23 pm,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News, Tamil Nadu Today News: தமிழ்நாட்டில் 24.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 


Latest Updates

  • பலத்த சூறாவளி காற்றினால் சாய்ந்த மோட்டார் சைக்கிள்:
    குன்றத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று கனமழை மற்றும் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இந்நிலையில் காற்றின் வேகத்தாலும் மழையினாலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியாமல் ஒருவர் குன்றத்தூரில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காற்றின் வேகத்தையும், மழையையும் வீடியோ பதிவு செய்தார். 

    அப்போது பலத்த காற்றின் வேகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தானாக கீழே விழுந்த காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

  • தலைமறைவாக இருந்த கொலைக்குற்றவாளி தற்கொலை:
    செய்வினை வைத்து தனது மாட்டைக் கொன்றதாகக் அண்ணனை  வெட்டி கொலை செய்து தலைமறைவாக இருந்த தம்பி - மரத்தில் தூக்கிட்டு தற்கொலை. விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மூட நம்பிக்கையால் 2 குடும்பமே அழிந்து விட்டதாக ஊர் மக்கள் பரிதாபம் தெரிவிக்கின்றனர்.

  • பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக வெற்றி:
    இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது முறையாக நடந்த பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக வெற்றி. 15 வார்டு உறுப்பினர்களை கொண்ட திருமழிசை பேரூராட்சியில் திமுக சார்பில் 6 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 6 உறுப்பினர்களும், மதிமுக, பா.ம.க, சுயேட்சை ஆகியோர்  தலா 1 உறுப்பினர்களும் உள்ளனர். 

  • மாதையனின் மரணத்திற்கு சீமான் கண்டனம்:
    சிறைவாசிக்கான முன்விடுதலைக் கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சிறைக்கொட்டடியில் 35 ஆண்டுகளாக வாடிய ‘வனக்காவலர்’ ஐயா வீரப்பன் அவர்களின் மூத்தச்சகோதரர் அண்ணன் மாதையன் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

  • சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் :
    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கீழப்பூசாரிப்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பேர் 3 உயிரிழந்தனர். கீழப்பூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் சிறுவர்கள் இறங்கி குளித்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 மாணவர்களும் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

  • சங்கிலியை லாவகமாக பறித்த திருடர்கள்
    நாமக்கல்லில் வீட்டின் உள்பக்கம் தாளிட்டு தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 4 சவரன் தங்க நகை பறிப்பு. வீட்டின் ஜன்னலை திறந்து கம்பியை உள்ளே விட்டு கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை லாவகமாக பறித்து கெண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள்.

  • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரிடம் மனித நேயம்: 
    மனநலம் பாதிக்கப்பட்ட நபராகவும் குப்பை பொறுக்குபவர் போலவும் உலா வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது. குளிர் சாதனப்பெட்டி (ஏசி),  செம்பு ஒயர்கள் உட்பட சில பொருட்களை திருடி சென்றது சிசிடிவி காட்சியில் பதிவானதை வைத்து, அவரை போலிசார் பிடித்தனர். தாடி மீசையுடன் சுற்றி திருந்தவரை முடித்திருத்தம் செய்து மனித நேயத்தை வெளிப்படுத்திய போலிஸ்.

  • அதிமுக எதிர்க்கட்சியாக எதையுமே சரிவர செய்யவில்லை - சசிகலா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை தி.நகரில் அண்ணா தொழிற்சங்க தென் சென்னை மாவட்ட தலைவர் குணசேகரன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்த சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும். சண்டை போடக்கூடாது. பேரறிவாளன் விடுதலைக்கு விதை போட்டது ஜெயலலிதா தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி ஒருவரே பேரறிவாளன் குற்றவாளி இல்லை என சொல்லியிருக்கிறார்.’ என கூறியதோடு இன்னும் பல விஷயங்களை பற்றி பேசினார். சசிகலாவின் செய்தியாளர் சந்திப்பு பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்.

     

     

  • 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடக்கம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 14ம் தேதி 11ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 3ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. 

     

  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் ஃபுட் கிங் சரத்பாபு கட்சியிலிருந்து விலகல்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் சரத்பாபு கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தலைவர் கமலஹாசன் வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பதாலும், கட்சியை கவனிப்பதில்லை என்பதாலும் தான் விலகுவதாக தெரிவித்து அவர் விலகல் கடிதம் அனுப்பியுள்ளார்.

  • குரங்கு அம்மை:  தமிழக அரசு அவசர அறிவிப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி பேரில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

     

  • கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 55

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 55க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிலோ ரூ. 90க்கு விற்றகப்பட்ட நிலையில், இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 35 குறைந்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 65 ஆக உள்ளது. 

  • 1 முதல் 9ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு எப்போது; இன்று முக்கிய அறிவிப்பு
    கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்.

  • புனிதஅந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
    நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் பழைமை வாய்ந்த புனிதஅந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

     

  • சென்னையில் பயங்கரம்- பா.ஜ.க. நிர்வாகி வெட்டிப் படுகொலை
    பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சென்னை மையப்பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link