Today News Live Updates - இன்றைய முக்கிய செய்திகள் (2022, ஜூன் 5)

Sun, 05 Jun 2022-8:48 am,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News, Tamil Nadu Today News: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 5) நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்!

Latest Updates

  • அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சவால்... நிரூபிக்க வேண்டும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும் - மா.சுப்ரமணியன்

     

  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் - டி.டிவி தினகரன்

     

  • மசூதியை வைத்து வன்முறை தூண்ட சதி; கர்நாடகாவில் 144 தடை

    மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜாமியா மசூதி சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

  • அதிமுக  கொடியை விரைவில் கைப்பற்றுவோம் , அதற்கான தைரியமும், சாதுரியமும் எங்களிடம் உள்ளது -  வி கே சசிகலா

     

  • ஸ்விக்கி ஊழியரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த டிஜிபி

    போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திர பாபு. போக்குவரத்து காவலர் சதீஷ் மீது கிரிமினல், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்ததாகவும் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்

  • மலர் கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியை சற்று முன்னர் நேரில் சென்று பார்வையிட்டார்.

  • UPSC Exam:  கோவையில் 24 மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படும் யுபிஎஸ்சி தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வானது முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுத வருவோர்களுக்கென உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்தும்,வெளி மாநிலம் மற்றும் மாவட்ட தேர்வுகளுக்கும் பேருந்து வசதியானது மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

     

  • தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் காயிதே மில்லத் அவர்களின் துயிலிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை 

    தமிழ்நாடு அரசின் சார்பில், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் 127-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், 
    சென்னை, திருவல்லிக்கேணியில்  அன்னாரது துயிலிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

  • உலக சுற்றுச்சூழல் தினம்: நெல்லையில் 50 கிலோ மீட்டர் தொடர் மிதிவண்டிப் பயணம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய 50 கிலோ மீட்டர் தொடர் மிதிவண்டிப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நெல்லை முதல் மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் பாபநாசம் வரை மிதிவண்டியில் பயணம் செய்து தூய பொருனை நெல்லைக்கு பெருமை என சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை மீட்டெடுத்து புத்துயிர் பெறச் செய்வதற்கு அரசு தன்னார்வலர்கள் உடன் இணைந்து நெல்லை நீர்வளம் என்ற திட்டத்தை நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது இத்திட்டத்தின் மூலம் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்துவது, மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் குட்டைகள் கொண்டவை பாதுகாப்பது மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

  • மெரினா கடற்கரையில் குளிக்கும்போது இழுத்துச் செல்லப்பட்ட மாணவனை காப்பாற்றிய தீயணைப்பு படையினர்

    நேற்று மாலை மெரினா பீச்சில் சாய்சரண் என்ற பிடெக் மாணவன் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட  நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மெரினாவில் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை தேடும் பணி ஆரம்பித்தவுடன் அருகில் வேற ஒரு  காலேஜ் மாணவன் பரமசிவம், ( வயது 18 ) கொரட்டூர் கடலில் குளிக்கும்போது இழுத்துச் செல்லப்பட்டார். அதை தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உடனடியாக  அந்த இடத்திற்கு சென்று உயிருடன்  காப்பாற்றினார்கள். 

  • சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட இரு கூடுதல்  நீதிபதிகள் நாளை பதவியேற்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த  என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி பரிந்துரைத்தது.

     முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகியோரை  கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து, அவர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

    இரு புதிய நீதிபதிகளும், நாளை பதவியேற்க உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17 ஆக குறைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட  நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும்.

  • பொறியியல் கல்லூரி மாணவர்களின் தனித்திறமையால் உருவாக்கப்பட்ட முதல் இன்ஹவுஸ் எலக்ட்ரிக் காரின் அறிமுக நிகழ்ச்சி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூரில் உள்ள Skill Lync பயிற்சி திறன் மையத்தில் பொறியியல் மாணவர்களின் தனித்திறமையை கொண்டு உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் காரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிக்கும் மாணவர்கள் தங்கள் துறையை விட்டு வேறு துறைகளில் பணிபுரிந்து சூழல் உருவாகி வருவதால் வாகனங்கள் உருவாக்குதற்க்கு பின்னால் நடைபெறும் பணி குறித்த செயல்முறை விளக்கம் அளிப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அதன் பயனாக தற்போது தங்களிடம் கூடுதலாக பயிற்சி பெற்று வரும் பொறியியல் மாணவர்கள் தங்களின் தனித்திறமையால் சுமார் 45 கி.மீ வேகத்தில் 5 பேரை சுமந்து செல்லக் கூடிய வகையில் இப்புதிய உள்நாட்டு எலக்ரிக் காரானது தயாரிக்கப்படுள்ளதாக தெரிவித்துக் கொண்டனர்.

  • பல கோடி ரூபாய்  மதிப்புள்ள ஐம்பொன்சிலைகள் மீட்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து களவாடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 ஐம்பொன் சிலைகள் இன்று இரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது .

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link