Jallikattu : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... கோலாகலமாக நிறைவு..!
Avaniyapuram Jallikattu 2024 Updates: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடித்த காளையர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நிறைவு பெற்றது.
தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மட்டும் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு, தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரிலும் நடைபெற இருக்கிறது. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான கார் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.
Latest Updates
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: சிறந்த காளை ஜீஆர் காளை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜீர் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசுக் கோப்பை மற்றும் கார் பரிசாக கொடுக்கப்பட்டது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: சிறந்த மாடுபிடி வீரர் கார்த்தி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அதிக காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி பரிசுக்கோப்பை மற்றும் காரை வென்றார்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: கோல்டு காயின் கொடுக்கும் பிடிஆர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு களிக்க குடும்பத்துடன் வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இறுதி கட்டத்தில் மாடு பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்க காசு வாரி வழங்கினார்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வருகை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு களிக்க குடும்பத்துடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வருகை புரிந்துள்ளார்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 50 பேர் காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாலை 04.35மணி நிலவரப்படி சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் உட்பட 50 பேர் காயமடைந்துள்ளனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: 17 காளைகள் பிடித்து முன்னணியில் இருக்கும் வீரர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் மொத்தம் 17 காளைகளை பிடித்து கார்த்தி என்பவர் முன்னணியில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரஞ்சித் குமார் என்பவர் 14 காளைகளை அடக்கினார்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: 825 காளைகளுக்கு அனுமதி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 10வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்று நடைபெற்று வரும் நிலையில், மொத்தமாக 825 காளைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: காளைகள் பரிசோதனை மையம் மூடல்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 10வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, காளைகளை பரிசோதனை செய்யும் மையம் மூடப்பட்டுள்ளது
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: 29 காளைகள் நிராகரிப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு காரணங்களுக்காக 29 காளைகளை அனுமதிக்க மறுப்பு
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த வெளிநாட்டினர்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் காண வந்த போர்ச்சுக்கல் நாட்டு சுற்றுலாப் பயணிகள்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: தங்க காசுகளை வாரிவழங்கிய அமைச்சர்கள்
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக களமாடிய காளைகள் மற்றும் காளையர்களுக்கு அமைச்சர்கள் பிடிஆர் மற்றும் மூர்த்தி ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாரி வழங்கினர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - இறுதிச் சுற்று
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று தொடங்கியது. 9 சுற்று முடிவில் 721 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 405 காளையர்கள் களமிறங்கியுள்ளனர்
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 9வது சுற்று
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 9வது சுற்று விறுவிறுப்பாக தொடங்கியது. 8 சுற்று முடிவில் 656 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 380 காளையர்கள் களமிறங்கியுள்ளனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: மாடுபிடி வீரர்களின் ஆள்மாறட்டம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் அடையாளத்துக்காக கொடுக்கப்பட்ட டீசர்டை மாற்றிக் கொண்டவர்களை நிர்வாக குழுவினர் எச்சரித்தனர். விதிமுறைகளை மீறி மாற்றி களத்தில் இறங்கியவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அழைத்துச் சென்றனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: டிரோன் பறக்க தடை
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை டிரோன் கேமரா மூலம் படம்பிடிக்க நிர்வாக குழு தடை விதித்தது. மீறுவோரின் டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: பாகுபலி காளைக்கு வந்த சோதனை
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பாகுபலி ஸ்டைலில் வந்த காளை, அமைதியாக நின்று கொண்டது. இதனால் மாடுபிடி வீரர் ஈஸியாக பிடித்துக் கொண்டார். அறிவிப்பாளர்... விட்டு பிடிப்பா என கூற... அந்த மாடுபிடி வீரர் பிடியை விட்டுவிட்டு மீண்டும் பிடித்தார். இதனால் பாகுபலி காளைக்கு விட்ட பில்டப் எல்லாம் வீணா போச்சே என அங்கிருப்பவர்கள் சிரியாய் சிரித்தனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: தெறித்து ஓடிய மாடுபிடி வீரர்கள்..!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் மூர்த்தி தங்க காசு அறிவிக்கும் மாடுகளில் பெரும்பாலானவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் விட்டனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் 6 பேர் படுகாயம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 6 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரிசுகள்..!
காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று கார் பரிசு பெறுபவர்கள் சென்னைக்கு முதலமைச்சரை சந்திக்க அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று கார் பரிசு பெறுபவர்கள் சென்னைக்கு முதலமைச்சரை சந்திக்க அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: கறார் காட்டும் அறிவிப்பாளர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அறிவிப்பாளராக செயல்படுபவர்கள், காமெடியாக பேசிக் கொண்டே விதிமுறை மீறும் வீரர்களை கறாராக கண்டித்ததார். அத்துடன் காவல்துறை மற்றும் விழாக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், வெற்றி பெற்று கார் பரிசு பெறுபவர்கள் சென்னைக்கு முதலமைச்சரை சந்திக்க அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அறிவித்தார்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்
காளைக்கு காலில் காயம் ஏற்பட்டதால், ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம். காளையை மருத்துவ ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன் போட்டி மீண்டும் தொடங்கியது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் மதுக்கடைகள் மூடல்
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் போட்டி நடைபெறக்கூடிய வில்லாபுரம், அவனியாபுரம், முத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்துக்கு மேற்பட்ட அரசு மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் மின்சாரம் துண்டிப்பு
பாதுகாப்பு நலன் கருதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலை, விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: காளைகள் அவிழ்க்க தடை - ரகசிய உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது கண்காணிப்பில் உள்ள தொடர் கடும் குற்ற வழக்குகள் பின்னணி உள்ள நபர்களின் பெயரில் காளைகளை அவிழ்க்க கூடாது எனவும் இதனை காவல்துறையினர் முறையாக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என காவல்துறை சார்பில் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அனல் பறக்கும் 6வது சுற்று தொடங்கியது
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் அனல் பறக்கும் 6வது சுற்றுப் போட்டிகள் தொடங்கின
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் காவல்துறை எச்சரிக்கை
அவனியாபுரம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டுகாளைகள் மற்றும் உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் அனுமதி இல்லை
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த புகைப்படத்துடன் கூடிய அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு காளைகளுடன் வரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக் கூடாது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஆயுதங்கள் எடுத்துவர அனுமதி இல்லை
காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஜல்லிக்கட்டு பார்க்க அனுமதி இல்லை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கக் கூடாது. கூடுதலான நபர்களை அனுமதித்து, அதன் விளைவாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஆணையர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் சம்பிரதாயங்களுக்கு அனுமதி இல்லை
அவனியாபுரத்தில் கிராமம் சார்ந்த நபர்களுக்கோ, கோவில் காளைகளுக்கு மரியாதை போன்ற சம்பிரயாதங்களோ அரசியல் கட்சியினர் தொடர்பான விளம்பரங்களோ, அறிவிப்புகள் வெளியிடவோ அனுமதி இல்லை
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரத்தில் லேசான தடியடி.!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தற்போதைய நிலவரப்படி நான்காம் சுற்று முடிவில் 360க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்கி விளையாடி வருகின்றனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.
அவனியாபுரம் வாடிவாசலில் பின்புறம் மாடுகளை அழைத்து வரும்போது மாட்டின் உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: சீறிப் பாய்ந்த 415 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள்..!
மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எட்டு பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது சுற்று முடிவில் இதுவரை 415 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவரை 200 மாடுபிடி வீரர்கள் விளையாடியுள்ளனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலுக்குள் புகுந்த நாய்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசல் பகுதியில் திடீரென உள்ளே நுழைந்த நாய். காவல்துறையினர் பலமுறை விரட்டியும் நாய் அங்கிருந்து செல்லவில்லை இதனால் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: மதுரை அவனியாபுரத்தில் போலீஸ் எஸ்ஐ காயம்
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் போலீஸ் எஸ்ஐ உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவனியாபுரம் வாடிவாசல் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்து வரும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: முதலமைச்சர், உதயநிதி பெயரில் கார் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி காட்சியளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: திருமாவளன் காளைக்கு தங்க காசு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காளையை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாத வகையில் அது சீறிப் பாய்ந்து வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காளை வெற்றி பெற்றது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: இதுவரை 33 பேர் காயம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 6 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: 16 காளைகளை அடக்கி கார்த்திக் தொடர்ந்து முதலிடம்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 4ம் சுற்று முடிவில் 16 காளைகளை அடக்கி கார்த்திக் தொடர்ந்து முதலிடம்!
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 5வது சுற்று தொடக்கம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 5வது சுற்று தொடங்கியது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: காளையை பிடித்தும் பரிசு இல்லை
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே காளையை இரண்டு பேர் பிடித்தால் பரிசு இல்லை.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 30 பேர் காயம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 6 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: கண்ணில் காயம் - வீரருக்கு சோகம்..!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் இருந்த அவனியாபுரம் கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ரூல்ஸ் பாலோ பண்ணுங்க..!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அரசு விதிமுறைகளை பின்பற்றாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படாது என நிர்வாக குழு அறிவிப்பு.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அனைத்து மாடுகளுக்கும் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி ஒன்று பரிசாக கொடுக்கிறார் அமைச்சர் மூர்த்தி
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: 3ம் சுற்று முடிவில் 15 காளைகளை அடக்கிய வீரர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்றாம் சுற்று முடிவில் சிறந்த மாடு பிடி வீரராக அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அவர் 15 காளைகளை அடக்கினார்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 பேருக்கு மேல்சிகிச்சை
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளுடன், காளையர்கள் போட்டிப்போட்டு அடக்கி வருகின்றனர். நடந்து முடிந்த 2 சுற்றுகளில் வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 6 பேர்
மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறதுAvaniyapuram Jallikattu 2024 Live Updates: தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
அறுவடையைக் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை, புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொடுக்கட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரட்டும் - பிரதமர் மோடி
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
அறுவடையைக் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை, புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொடுக்கட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரட்டும் - பிரதமர் மோடி
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும்" -நடிகர் ரஜினிகாந்த்
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: கோல்டு காயின் கொடுக்கும் அமைச்சர் மூர்த்தி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கோல்டு காயின் உள்ளிட்ட பரிசுகளை வாரி வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. கடந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பைக்குகள் பரிசாக கொடுத்த அவர், இந்த ஆண்டு கார்களை பரிசாக கொடுக்க இருக்கிறார். இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரிலும் கார் பரிசு கொடுக்கப்பட இருக்கிறது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஸ்டார் மாடுபிடி வீரர்கள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 6 காளைகளை அடக்கி முதல் இடத்தைப் பிடித்தார். அவனியாபுரத்தைச் சேர்ந்த திருப்பதி, மணி ஆகியோர் தலா 4 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: திருநங்கை கீர்த்தனாவின் காளை வெற்றி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட திருநங்கை கீர்த்தனாவின் காளை வெற்றி வாகை சூடியது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: விசிக தலைவர் திருமாவளவன் காளை வெற்றி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் பங்கேற்ற விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காளை வெற்றி பெற்றது.
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: ஜல்லிக்கட்டு வீரருக்கு ரெட் கார்டு வார்னிங்
முதல் சுற்றில் 4 காளைகளை அடக்கி 2வது சுற்றுக்கு முன்னேறிய மாடுபிடி வீரர் திருப்பதிக்கு ரெட் கார்டு எச்சரிக்கை. மற்ற வீரர்கள் காளைகளை பிடிக்கும்போது அதனை மீறி காளைகளை அடக்க முற்படுவதால் நிர்வாக குழு கடும் எச்சரிக்கை
Avaniyapuram Jallikattu 2024 Live Updates: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்
கோலாகலமாக நடைபெறுகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள்
Avaniyapuram Jallikattu 2024 Live Updates in Tamil: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முடிவில் 6 காளைகளை அடக்கி அசத்திய வீரர் முத்துகிருஷ்ணன்..!