LIVE TN Rain Update:18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Fri, 12 Nov 2021-1:38 pm,

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்புகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இரவு முழுவதும் 4000 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார். 


 

Latest Updates

  • சென்னை பெருநகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திட தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

  • 12.11.2021 அன்று மன்னார் வளைகுடாவில் மற்றும் குமரி பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மழையைத் தொடர்ந்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவடங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நவம்பர் 12, 13, 14, 15, 16 தேதிகளில்  இடியுடன் கூடிய கனமழை:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நவம்பர் 12, 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில், நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

     

  • ஓ.பன்னீர்செல்வம் அட்வைஸ்
    மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்பில் இருக்கும்பொழுது விவாதங்களை தவிர்த்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

     

  • 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • வீக்-எண்டில் மீண்டும் விசிட் செய்யுமா மழை?

    கன்னியாகுமரி மழை ‘அவுட் ஆஃப் சிலபஸாக’ வந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வானிலை ஆய்வுகள் மற்றும் கணிப்புகளின் படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெற்கு கேரளா மற்றும் கன்னியாகுமரி மண்டலங்களில் அதிகன மழை பெய்யும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.

  • சென்னையில் 7 சுரங்கப் பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னையில் சுமார் ஒரு வார காலமாக பெய்த கனமழையால், ஆங்காங்கே நீர் தேங்கி பல முக்கிய சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த நிலையில், மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளின் விவரங்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. 

     

     

     

  • தி-நகரில் மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சுமார் ஒரு வாரமாக தமிழகத்தை, குறிப்பாக சென்னையை மழை வாட்டி எடுத்தது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள தியாகராய நகரில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

  • மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை  பெய்தது. அதில் சென்னை வெள்ளக்காடாக மாறியது.  சாலைகளில் தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

  • கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்பு சற்று அதிகம் என்றே கூறலாம். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவருவது தெரியவந்திருப்பதாகவும். உண்மை நிலை அறியாமல் பலரும் இதை பகிர்வதால் மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனவே இது போன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் அதுபோன்ற பதிவுகளை கண்காணிக்க சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுருப்பதாகவும் அதுபோல் கண்டறியப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் அவர்களது வலைதள கணக்குகள் முடக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

     

  • தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், இன்று வெளியான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், இன்று (12.11.2021)  மன்னார் வளைகுடாவில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link