LIVE: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி

Thu, 26 May 2022-5:23 pm,

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி: பிரதமர் மோடி நாளை (2022 மே, 26) தமிழகம் வருகை தருகிறார்.  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 


 

Latest Updates

  • செம்மொழி தமிழாய்வுக்கு சென்னையில் புதிய வளாகம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேலும் பிரபலப்படுத்த இந்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. செம்மொழி தமிழாய்வுக்கு புதிய வளாகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. 

    தேசியக் கல்விக் கொள்கை காரணமாக தொழில்நுட்ப, மருத்துவப் படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே படிக்க இயலும். தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலன் அடைவார்கள். 

    இலங்கை கடினமான சூழலை சந்தித்து வருகிறது. ஒரு நண்பனாக இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்துவருகிறது. உணவு, மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இந்தியா இலங்கைக்கு தருகிறது

  • பிரதமர் மோடியின் உரை:

    உங்கள் குழந்தைகள் உங்களை விட சிறப்பான வாழ்வை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். அதற்கு மிக முக்கியம் உட்கட்டமைப்பு மேம்பாடு. அனைத்து கிராமங்களுக்கு அதிவேக இண்டர்நெட்டை கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.  இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ஏழைகள் நலனை உற்தி செய்வதே எங்கள் நோக்கம். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கொண்டு செல்ல பணியாற்றி வருகிறோம். 

  • தமிழ்நாட்டின் கலாசாரமும், மொழியும் மிகச்சிறப்பானவை: பிரதமர் மோடி

    தமிழ்நாட்டின் கலாசாரமும், மொழியும் மிகச்சிறப்பானவை. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.. என்று பாடினார் பாரதியார். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது.சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென்னாப்பிரிகா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. பிரான்ஸ் கான்ஸ் திரைப்பட விழாவில் எல்.முருகன் சிவப்பு கம்பளத்தில் கலந்து கொண்டார். கூடுதல் சிறப்பாக வேட்டி சட்டையில் கலந்து கொண்டார். அது தமிழை பெருமைப்பட செய்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்று ஒரு முக்கியமான நாள். 31000 கோடிக்கு திட்டங்கள் கிடைத்திருக்கின்றன. 

  • வணக்கம் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

    பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில்1152 வீடுகள்  கட்டப்பட்டுள்ள  நிலையில், பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் வணக்கம் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

  • தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3ஆவது ரயில்பாதையை தொடங்கிவைத்தார் பிரதமர்.

  • பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கும் திட்டங்கள்

    1803 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன. இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

  • பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலைக்கும்,  அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி, மதுரவாயல் - சென்னை துறைமுகம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர். மேலும், 1428 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் அமையுள்ள பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

  • விழாவில் மு.க. ஸ்டாலின் உரை: இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது தமிழ்நாடு. ஆகையால் அதிக நிதியினையும் அதிக திட்டங்களையும் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்

  • விழாவில் மு.க. ஸ்டாலின் உரை: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கச்சத்தீவினை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி மக்களின் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம். 

    14006 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விரைந்து தர வேண்டும். 

    ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும் என்று வற்புறுத்தி கேட்கிறேன். 

    தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    இதனை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளில் உள்ள நியாத்தை பிரதமர் உணர்வார்கள் என்று நம்புகிறேன்: முதலமைச்சர் 

  • விழாவில் மு.க. ஸ்டாலின் உரை: 

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் விழா இதுதான். தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் திட்டங்கையும் பைப்லைன் திட்டங்களையும் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி.  இந்தியாவின் மொத்த ஜி.டி.பி-யில் தமிழ்நாட்டின் பங்கு 9.2 விழுக்காடு. இணைத் திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்குபோது ஆரம்பத்தில் அதிக நிதி அளித்தாலும் காலப்போக்கில் குறைத்து மாநில அரசு அதிக செலவு செய்யும் போக்கு உள்ளது. இதனால் மாநில அரசின் நிதிசுமை அதிகரிக்கிறது - முதலமைச்சர் பேச்சு

  • மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

    பிரதமர் மோடி பங்கேற்றுவரும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். தனது உரையில், புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார் இணை அமைச்சர் எல். முருகன். 

  • விழா மேடையை வந்தடைந்தார் பிரதமர் மோடி

    பிரதமர் மோடிவிழா மேடையை வந்தடைந்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்,  ஆளுநர் கே.என்.நேரு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

  • பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு 

    நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்லும் வழியெங்கும், பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். சாலை ஓரம் திரண்டு வரவேற்பு அளித்த மக்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடியும் கையசைத்தார்.

  • சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி

  • தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன்  அமோக வரவேற்பு

    சென்னை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்ணா சாலையில் கோலாகலமாக தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன்  அமோக வரவேற்பு அளிக்கப்ப்படுகிறது.

  • பிதமர் மோடிக்கு தமிழக பாஜகவினர் அமோக வரவேற்பு

    பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழி எங்கும் பாஜகவினர் திரண்டு அவருக்கு மிக உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

  • நேரு உள் விளையாட்டு  அரங்கிற்கு செல்கிறார் பிரதமர் மோடி

    சென்னை INS கடற்படைத் தளத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, பெரியமேடுவில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சாலை மார்க்கமாகப் புறப்பட்டார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link