Live Update: மே 28, 2022: இன்றைய முக்கிய செய்திகள்

Sat, 28 May 2022-11:54 am,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: 28.05.2022 முக்கிய நிகழ்வுகளின் முன்னோட்டம்...

இன்றைய முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளும் நேரலை...


Latest Updates

  • தாய்மொழி தாய் நாடு மிக முக்கியமானது

    மம்மி டாடி என்று சொல்லும் கலாச்சாரத்தை தவிர்த்து அம்மா என்று சொல்லவும் தாய்மொழி முக்கியமானது - வெங்கய்யா நாயுடு

  • வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே என உரையை முடித்தார்

    முதல்வர்மாண்புமிகு, முதல்வர் ஸ்டாலின்,துரைமுருகன் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர் என்று தமிழில் பேசதொடங்கினார் துணை குடியரசு தலைவர்

  • சிலை திறப்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், நடிகர் நாசர் உள்ளிட்ட திரைப்படத் துறையை  சேர்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

  • சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் வானுயர்ந்த சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். 

  • கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். 

  • அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதி சிலை

    துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு வருகை, அவர்க்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் முதல்வர்

  • முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் வருகை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார்.

     

  • அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் கருணாநிதி சிலை: துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார்.

    சிலையின் சிறப்பம்சங்கள் :

    - 1.56 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    - கருணாநிதியின் சிலையை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் முதல் சிலை முதல் தற்போது வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கருணாநிதியை சிலையை வடிவமைத்தவர் தீனதயாளன்.

    - 12 அடி பீடத்தில், 16 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    - இந்த சிலை 3 டன் களிமண் மற்றும் 2 டன் வெண்கலம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    - தமிழ்நாட்டிலேயே உலோகத்தினால் செய்யப்பட்ட  மிக உயரமான சிலை இதுவாகும்.

  • முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: சீமான்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

    சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுள்ளார். ‘திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் கடந்த ஒரு வார காலமாகத் தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமாகி வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டிலேயே தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது.' என்று அவர் கூறியுள்ளார். 

  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நிரல்:

    இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை திறந்து வைப்பார். அதனைத் தொடர்ந்து சென்னை, கலைவாணர் அரங்கத்தில் சிலை திறப்பு விழா நடைபெறும். 

  • மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம்

    மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது  உறுதி செய்யப்பட்டது. தினமும் பத்துக்கும் மேற்பட்ட‌ நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  • திருப்பத்தூர் அருகே  ஒரு வயது குழந்தையின் சடலம் மீட்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பாரத்தில், சுமார் ஒரு வயதுடைய ஆண் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    துணியால் சுற்றப்பட்டு குழந்த இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் அங்கு சென்று ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • உயர் நீதிமன்ற மதுரை கிளை  அதிரடி தீர்ப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அடிதடி வழக்கு, சீட்டு மோசடி, குட்கா பொருள் விற்பனை, மணல் திருட்டு , மிரட்டல் உள்ளிட்டபல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை  அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    முன்ஜாமீன் கோரிய மனுதாரர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

  • குன்னூர் சீம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி துவங்கியது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குன்னுார் சீம்ஸ் பூங்காவில் 62 வது பழக் கண்காட்சி இன்று துவங்கியது.

    2 டன் பழங்களை கொண்டு உருவாக்கபட்ட பிரம்மாண்ட ராட்சத கழுகு, பேண்டா கரடி, தேனீ பூச்சி, ஊட்டி 200 சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

     

  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.

  • பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் அவசியம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நாவடக்கம் அவசியம்  என்று பத்திரிகையாளர் மன்றம் அண்ணாமலைக்கு அறிவுறுத்தியுள்ளது.

  • குப்பை அகற்றுதலில் உலக சாதனை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராணிப்பேட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் புதிய முயற்சியாக 3.5 மணி நேரத்தில் 186.9 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் உலக சாதனை படைத்துள்ளது.

    உலக சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

  • கோவையில் யானை மீட்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டு எந்தவித உரிய ஆவணங்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டு வந்த 20 வயதுடைய பெண் யானை மீட்கபட்டுள்ளது.

    மதுரை மாவட்ட வன துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி போதிய பராமரிப்பு இல்லாமல் வளர்க்கப்பட்ட ரூபாலி என்ற பெயருடைய பெண் யானையை பறிமுதல் செய்தனர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link