Live Update: 2022 ஜூன் 14 இன்றைய முக்கிய செய்திகள்

Tue, 14 Jun 2022-8:13 am,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 14.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 

Latest Updates

  • இந்திய அணி 179 ரன்கள் குவிப்பு.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

    தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய 179 ரன்கள் குவிப்பு

     

     

     

     

  • தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய ஓபனிங் வீரர்கள் இருவரும் அரைசதம் குவிப்பு.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (14-06-2022)முகாம் அலுவலகத்தில், நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி சந்தித்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.

  • கோவளம் புளூ ப்ளாக் பீச் திட்டம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது - சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் 

     

  • முன் கூட்டியே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்.!

    மீன்பிடி தடை காலம் முடிவதற்கு முன்பாகவே மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் மீன் பிடிக்கச் செல்ல தயாராகியுள்ளனர்.

  • மத வெறுப்பைப் பரப்புபவர்களைக் கைது செய்க!

    தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

  • சந்திரமுகி பார்ட் 2 படத்தை தயாரிக்கும் லைகா!

    சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ், வடிவேலு நடிக்க இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

  • அண்ணாமலைக்கு சரத்குமார் ஆதரவு 

    சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்,  பாஜக தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை எனக் கூறினார்.  

  • சீனாவில் அதிகரிக்கும் கொரோனா

    சீனாவில் ஷாங்காய் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

  • இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்

    இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். 

  • 10 லட்சம் பேருக்கு அரசு வேலை

    அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்

  • அண்ணாமலை மீது நடவடிக்கை 

    ஆதாரம்  இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

  • அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை - ஜெயக்குமார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஒற்றைத் தலைமை தேவை என தலைமைக் கழக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். இன்றைக்கு அது குறித்து விவாதிக்கப்படவில்லை. காலத்தின் கட்டாயத்தால் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது. கட்சிக்கும் சசிகலாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரைப் பற்றி பொதுக்குழுவில் பேசி நேரத்தை வீண் செய்ய மாட்டோம். அதிமுக-வுக்கு அழிவு என்பதே இல்லை. வெற்றி தோல்வி என்பது நாணத்தின் இருபக்கம் போல.

     

  • கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பேருந்து - கார் மோதல்

    கேரளாவில் முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறத்தில் கார் ஒன்று மோதிய பரபரப்பு காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது. 

  • ஜவாஹிருல்லா  கோரிக்கை

    குடியரசுத் தலைவர் தேர்தலில்  எதிர்கட்சிகளை சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

  • பெண் குழந்தை பலி 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அருகே 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலி. காவல்துறையினர் விசாரணை

     

  • பழனி மலையில் ரோப் கார் நிறுத்தம்

    பழனி மலைக்கோயில் ரோப்கார் சேவை ஆண்டு பராமரிப்பின் காரணமாக 45 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

  • எடப்பாடி பழனிசாமி மீது புகார்

    தமிழக முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.

  • தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழகத்தில்  கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மருத்துவத்துறை டெண்டர் விவகாரம்

    ஊட்டச்சத்து தொகுப்பு ஒப்பந்தத்தில் முறைகேடு என அண்ணாமலை புகார் கூறிய நிலையில், அவர் குற்றச்சாட்டு முன்வைத்த நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைந்த விலையில் பாலாஜி சர்ஜிக்கல் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது

    அடையாள அட்டை கொடுக்கும் அதிமுக

    23 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க அதிமுக முடிவெடுத்துள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என முடிவெடுத்துள்ளது.

  • சாக்கடை வசதிகோரி மக்கள் போராட்டம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஈரோடு மாவட்டம், ஜம்பையில் முறையாக குடிநீர் மற்றும் சாக்கடை வசதி செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு

    வணிகர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழக அரசு அறிமுகப்படுத்திய வணிகர் பாதுகாப்பு செயலி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை தென்காசி காய்கறி சந்தையில் ஒட்டி வணிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது புகார் 

    கோவை மாவட்டம், அன்னூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆம்புலன்சில் வரும் அவசர கேஸ்களை கூட பார்க்காத அவலம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    காணாமல் போனவர் சடலமாக மீட்பு

    திருவாடானை அருகே கோவணி கண்மாயில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவணி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் டேவிட் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

     

     

  • தமிழக பா.ஜ.க தலைவர் மீது புகார்

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது கோவையில் புகார். முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக நிர்வாகி புகார்

  • அதிமுக தொண்டர்கள் முழக்கம்

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒற்றை தலைமையை வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் முழக்கம்

  • கமல்ஹாசன் - டி.ராஜேந்தர் சந்திப்பு 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கும் திரு.டி.ராஜேந்தர் அவர்களை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்.

  • அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    திருப்பதிக்கு இணையாக  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  மேம்படுத்துவதற்கான  வளர்ச்சி பணிகள் மற்றும் திருக்கோவில் உட்கட்டமைப்புகள் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான   அடிப்படை வசதிகளான, குடிநீர், கழிவறை, தங்கும் விடுதிகள் போன்ற கட்டுமான பணிகள் குறித்தும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தார்.

  • கும்பகோணம் இரட்டைக் கொலை வழக்கு 

    சோழபுரம் இரட்டை கொலை வழக்கில் கைதான சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகியோரை திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் சோழபுரம் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. இதனைத் தொடர்ந்து இருவரையும் திருச்சி மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு செல்கின்றனர்

  • 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு

    தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஜூன் 17ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் tnresults.nic.in தளத்தில் முடிவுகளை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    - அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி.

    - அனைத்து வகை பல்கலைக்கழகத்திலும் 69% இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்: அமைச்சர் பொன்முடி.

  • கணவன் கண் முன்னே மனைவி பலி

    சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே கணவன் மனைவி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சோப் ஆயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி மோதியதில் கணவன் கண் முன்னே மனைவி பலியானார்.

  • சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் 

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதில் 75 மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

  • மின் தட்டுப்பாடு: அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை முக்கிய ஆலோசனை
    மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

     

  • சென்னை தங்கம் விலை நிலவரம்
    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்  ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது. 

  • மேல் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்
    இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று இரவு 9.30 மணிக்கு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். 

  • நாளை 18 மாவட்டங்களில் கனமழை
    தமிழகத்தில் நாளை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

  • கோவையில் இருந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று தனியார் ரயில் இயக்கம்
    பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயில் திட்டங்களின் ஒரு பகுதியாக கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தனியார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

  • 23ல் பொதுக்குழு கூட்டம் - இன்று அதிமுக ஆலோசனை
    இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில்அதிமுக தலைமை கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

  • பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 14, 2022) விலை நிலவரம்
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link