Rain Live Updates: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும்
Tamil Nadu Weather Updates: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்யும் என ரெட் அலர்ட் (Red Alet) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது ,எனவே மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது
Tamil Nadu Weather Updates: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை பெய்யும் போது தமிழகம் தண்ணீரில் மிதப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முக்கியக் காரணம் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், ஓடை உள்ளிட்டவைகளை பருவ மழைக்கு முன்னரே சரியாக திட்டமிட்டு, தூர்வாரி ஆழப்படுத்தாமல் இருப்பது தான். இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்யும் என ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, எனவே மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Latest Updates
கடலூர் அருகே கரையை கடக்கும்:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே கரையை கடக்கும் அறிவிப்பு.புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு:
தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் வரும் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு, தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். தற்போது வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு:
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார்:
தமிழகத்தில் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர் என டிஜிபி சைலேந்திரபாபு தகவல் அளித்துள்ளார்.கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைப்பு:
ரெட் அலர்ட் காரணமாகவும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் 10.11.2021 முதல் 13.11.2021 வரை ஆகிய நான்கு நாட்களில் மட்டும் நடைபெறவிருந்த 2 மற்றும் 3ஆம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கான தேதி தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழகத்தில் 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழையும், அதேபோல கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், குமரி பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை மற்றும் ஆந்திரா கடற்கரையில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்:
சென்னை பராங்குசபுரம் மழைநீர் வெள்ளத்தால் சூழப்பட்டு இருப்பதால் அங்கு மின்சாரம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது எனத் தகவல் கிடைத்ததை அடுத்து TNSDMA தன்னார்வலர்கள் உடனடியாக அங்கு சென்று குடிநீர் வழங்கினர்.