TN Local Body Election Results 2021 LIVE: திமுக தொடர்ந்து முன்னிலை

Tue, 12 Oct 2021-1:46 pm,

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 74 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6 ஆம் தேதி, 9 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது. 6 ஆம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9 ஆம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.


வாக்கு எண்ணுவதை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு 20-ம் தேதி நடைபெற உள்ளது.

Latest Updates

  • ஆம் ஆத்மி கட்சியின் இருவர் தமிழக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தமிழக ஆம் ஆத்மி கட்சி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராணிப்பேட்டை மாவட்டம், வார்டு எண் 6, நவலோக் என்ற வார்டின் உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியின் திரு. எம். ஜீவானந்தம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளா. 

    வேலூர் மாவட்டம், கொல்லப்பள்ளி வார்டு எண் 2-இல் இருந்து திருமதி A. பிரசாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • ஒன்றிய கவுன்சிலர்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அதிமுக 62
    திமுக 369

    மாவட்ட கவுன்சிலர்

    அதிமுக 4
    திமுக 93

  • தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அண்மையில் கிடைத்த தகவல்களின்படி, திமுக கூட்டணி 329  இடங்களையும், அதிமுக கூட்டணி 63 இடங்களையும் பெற்றுள்ளது.

    விஜயின் மக்கள் இயக்கம் 51 வார்டுகளில் உறுப்பினர் பதவிகளை வென்றுள்ளது.

  • விஜய் மக்கள் இயக்கத்தினர் இதுவரை 49 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

  • மாவட்ட கவுன்சிலர்கள் முன்னிலை நிலவரம்:
    திமுக + =  67 
    அதிமுக +=  4
    பாமக =1

  • ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலை நிலவரம்:

    திமுக + - 198
    அதிமுக + - 23
    பாமக - 7
    அமமுக - 1
    சுயேச்சைகள் - 7

  • முன்னிலை நிலவரம்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    ஒன்றியக் கவுன்சிலர்:

    திமுக + 161
    அதிமுக+ 23
    பாமக 6
    அமமுக 1

  • விஜய் மக்கள் இயக்கம்  வேட்பாளர் வெற்றி:
    மாமண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் வடபாதியை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் என்பவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

  • ஒரே ஒரு வாக்கு -பாஜக வேட்பாளர்

    குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்

  • உள்ளாட்சி தேர்தல் முடிவு: முன்னிலை நிலவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஒன்றிய கவுன்சிலர் நிலவரம் 
    மொத்தம் 1380
    திமுக - 240
    அதிமுக - 18

    மாவட்ட கவுன்சிலர் நிலவரம் 
    மொத்தம் 140
    திமுக - 91
    அதிமுக - 4

  • ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி:
    திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கடல் மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  • மாநில தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை: உயர்நீதிமன்றம்:

    வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  • தொடரும் திமுக முன்னிலை:
    * மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் 12 இடங்களில் திமுக முன்னிலை.

    * ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் 30 இடங்களில் திமுக முன்னிலை

  • தர்ணா போராட்டம்:
    குன்றத்தூரில், மாங்காடு பகுதியில் காலை உணவு தரவில்லை என வாக்கு எண்ணும் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உணவு, குடிநீர் என எதுவும் இன்னும் தரவில்லை என ஆதங்கம். இதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.

  • போலீஸ் குவிப்பு:
    வாக்கு எண்ணும் மையத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குவாதம்... 

  • தபால் வாக்குகள் செல்லாது: 
    வல்லம் ஒன்றியத்தில் 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு

  • திமுக முன்னிலை:
    தற்போதைய நிலவரப்படி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • வெளிப்படை தன்மை:
    வாக்கு எண்ணிக்கை வெளிப்படை தன்மையுடன் நடக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

  • கள்ளக்குறிச்சி மாவட்டம்:
    உளுந்தூர்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் இன்னும் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கவில்லை.

  • ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2021:

    தற்போது வரை திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம். காட்பாடியில் வாக்கு எண்ணிக்கை 1 மணிநேரம் தாமதம். குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. 

  • திமுகவை சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

     

  • முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்; பின்னர் வாக்குப் பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்

  • உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

  • வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது

  • இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

     

  • ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link