இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் முக்கிய அறிக்கைகள்!

Tue, 18 Oct 2022-8:21 am,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை இன்று வெளியாகிறது.

தமிழக சட்டமன்றம் இன்று 2வது நாளாக கூட உள்ளது.  ஜெயலலிதா மரணம் பற்றி விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. 


 

Latest Updates

  • இந்தி பேசாத மாநில விரும்பும் வரை  ஆங்கிலம் தொடர வேண்டும். தமிழும் ஆங்கிலமும் தான் இருமொழி கொள்கை அது தான் நமது கொள்கை. இந்திக்கு தாய் பாலும் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்டுவது போல் உள்ளது - முதல்வர்

  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது ஆனால் விசாரணை ஆணைய சாட்சியங்களின் அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3 50 மணிக்குள்ளாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

  • ஜெ இறந்த தேதியில் மிகப்பெரிய குழப்பம்

    ஜெ இறந்த நேரம் டிசம்பர் 5ம்தேதி இரவு 11.30 என கூறப்படும் நிலையில், ஆனால் சாட்சியங்கள் டிசம்பர் 4 மதியம் 3.30 மணிக்கே இறந்து விட்டார் என சாட்சியம் தெளிவுப்படுத்துகிறது என அறிக்கையில் தகவல்

  • தூத்துக்குடி துப்பாக்கி சூடு நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல்.  17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை

  • 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் சுமூக உறவு இல்லை - ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் தகவல். ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரது சிகிச்சை விவரங்கள் ரகசியம் காக்கப்பட்டது - ஆணையம்

  • ஜெ மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜெயலலிதா சிகிச்சை பற்றி விசாரிக்க வேண்டும்.  மருத்துவர்கள் பரிந்துரை படி ஆஞ்சியோ அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.  ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  சிவகுமார் அகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது. அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கிறது  - ஆணையம் 

     

     

  • எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக எம்எல்ஏகள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு

  • எதிர்கட்சி துணை தலைவர் நியமனம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு சட்டபேரவையில் விளக்கம்.  விதிப்படி துணை தலைவர் பதவியே இல்லை, எதிர்கட்சி தலைவர் பதவி தான் அங்கீகரிக்கப்பட்டது.  பழனிசாமி, பன்னீர் செல்வம் அளித்த மனுக்கள் என்னுடைய பரிசீலனையில் உள்ளது, அலுவல் ஆய்வு குழுவில் யாரை சேர்ப்பது என்பது சபாநாயகர் முடிவு, இதில் யாரும் தலையிட முடியாது.

  • தூத்துக்குடியில் காட்டுத்தனமாக மனிதவேட்டை நடத்தியுள்ளனர். அதற்கு எதிர்கட்சித் தலைவர் பதில் சொல்லியாக வேண்டும்.இதற்கு அஞ்சியே அதிமுக அமளியில் ஈடுபடுகிறது" - அமைச்சர் துரைமுருகன்

  • எதிர்க்கட்சியின் மாண்பை குறைகிறது அதிமுக செயல்பாடு.  ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட அதிமுகவினர்  திட்டமிட்டு குழப்பம் ஏற்ப டுத்துகிறார்கள் - சபாநாயகர்

  • இன்று பேரவையில் இந்தி எதிர்ப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது நீங்கள் ஒன்றிய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தி  தீர்மானம் நிறைவேற்றும் பொழுது அச்சமயம் பேரவையில் இல்லாமல் இருப்பதற்கு இது போன்ற கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துகிறீர்கள்

    சபாநாயகர்

  • 1989ம் ஆண்டு கலைஞர் பட்ஜெட் தாக்கல் செய்தபோது புத்தகத்தை கிழித்த மாதிரி உங்கள் செயல்பாடு உள்ளது.  சபை காவலர்கள் அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர்

     

  • பேரவை தொடங்கியவுடன் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  

    கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  பேரவை விதி படி ஒவ்வொரு நாள் வினா விடை நேரம் நடைபெற வேண்டும், பேரவையில் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுங்கள் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.  அதிமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றனர்.

  • இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் திருக்குறள் உரையுடன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் துவங்கியது

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் சபாநாயகர் அப்பாவை அதிமுக எஸ்பி வேலுமணி சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக இயற்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் பிறகு இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது

  • அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சபாநாகருடன் சந்திப்பு

  • ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது,  அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள், உடல் உபாதை குறித்த முழு தகவல் வெளியாக இருக்கிறது

  • தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் அமித்ஷா தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைகளை நடமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

  • உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, CPIM மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று தொடங்கியது.  எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள ஓ.பி எஸ், எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றப்படவில்லை.

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link