TN Assembly 2023 Live : முடிந்தது நாள் கூட்டம்... ஆளுநர் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுவது என்ன?

Mon, 09 Jan 2023-1:27 pm,

Tamil Nadu Assembly Highlights: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வாசித்தார். இத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவுபெறும்.

Tamil Nadu Assembly Session 2023 Live Updates : 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார். தற்போது ஆளுநர் - 'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் சூழலில் இந்த ஆளுநரின் உரை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக போன்ற எதிர்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை அவையில் எழுப்ப காத்திருக்கும் என்பதால் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க : TN Assembly 2023: பரபரப்பான சூழலில் கூடுகிறது 'தமிழ்நாடு' சட்டப்பேரவை - இன்று கவர்னர் ரவி உரை


தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று துவங்குகிறது.


ஆளுநர் உரை முடிந்தவுடன், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வாசிப்பார். அதன்பிறகு சபாநாயகர் அப்பாவு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களை முடிவு செய்து அறிவிப்பார். இத்துடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவுபெறும். 


அமைச்சரானதும் முதல்முறையாக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்


ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை சில அரசியல் கட்சிகள் புறக்கணிக்குமா எனவும, மறுபுறம் வழக்கம் போல எடப்பாடி பழனிசாமி தரப்பினர், தங்களுடன் பன்னீர்செல்வம் தரப்பினரை அமர வைத்தது தவறு என்று கூறி, ஆளுநர் உரையை புறக்கணிக்குமா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

Latest Updates

  • வேதனையோடு தெரிவிக்கிறேன் - அப்பாவு

    செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் சந்திப்பில்,"ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன். ஆளுநர் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். ஆளுநர் பொது மேடையில் பேசுவதை  போல் பேசுவது ஏற்புடையது அல்ல" என்றார்.

  • ஜன. 13 வரை கூட்டத்தொடர் நடைபெறும்

    சபாநாயகர் தலைமையில் நடத்தப்பட்ட அலுவல் கூட்டத்தில், இந்த கூட்டத்தொடர் வரும் ஜன. 13ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இறுதிநாள் அன்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுவார். 

  • முதல்வர் பேச்சை கேட்க வரவில்லை

    'நாங்கள் ஆளுநர் உரையை கேட்க வந்தோமே தவிர, முதலமைச்சர் பேச்சை கேட்க நாங்கள் வரவில்லை' என அவையில் இருந்து வெளியேறிய பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

  • முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்

    ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்த உரை தமிழ்நாடு சட்டமன்ற அவை குறிப்பில் இடம் பெறாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு அச்சில் கொடுத்த எழுத்துக்களை (உரையை) முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்ற தீர்மானம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதாவது, அவர் தவிர்த்த சொற்கள் இடம்பெறும் என்றும் சேர்த்த சொற்கள் இடம்பெறாது என விளக்கமளித்தார். முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

  • வெளிநடப்பு செய்த ஆளுநர்

    முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே, ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். முன்னதாக, இபிஎஸ், ஓபிஎஸ் அவையில் இருந்து வெளியேறினர். தேசிய கீதத்தை பாடுவதற்கு முன்னர் ஆளுநர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

  • தமிழ்நாடு, திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர். அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். 

  • இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற இருக்கிறார்

  • ஜெய் ஹிந்த் என கூறி தனது உரையை நிறைவுசெய்தார், ஆளுநர் ஆர்.என்.ரவி. தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாகத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

  • மெட்ரோவில் செல்கிறாரா ஆளுநர்...?

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை முடித்த உடன் மெட்ரோ ரயில் மூலம் ராஜ் பவன் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

  • ஆளுநர் ஆர்.என். ரவி உரையின் முக்கிய புள்ளிகள்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அத்திகடவு- அவிநாசி திட்டம் விரைவில் அமலுக்கு வரும்

    மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1.01 கோடி மக்கள் பயன்பெற்று உள்ளனர்.

    2ஆவது மற்றும் 3ஆவது கொரோனா அலையை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    நீட் தேர்வை தடுக்க மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

  • ஆளுநர் ஆர்.என்.ரவி உரை முக்கிய புள்ளிகள்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    போதை பொருட்கள் கடத்தல், விநியோகத்தை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான உரிமை மீட்டு எடுப்பதில் உறுதியாக உள்ளது, 232 மீனவர்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளனர், 10 மீனவர்களை மீட்க நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.

    காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்தரங்கம் நடத்தி உள்ளது.

    உலகளாவிய நிபுணர்களுடன் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    கடுவேலி, அகத்தியார் மலையில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது

    பாலுக்கான கொள்முதல் விலை ₹3 உயர்த்தப்பட்டு உள்ளது. 

     

  • திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிகட்சிகள் கோஷங்களை எழுப்பிய படி வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் ரம்மி மசோதா ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து கோஷமிட்டனர்.  'ஆர்எஸ்எஸ் பாஜக கொள்கையை திணிக்காதே' என்று முழக்கமிட்டு வெளி நடப்பு செய்தனர்.

     

  • கூட்டணி கட்சிகள் தொடர் கோஷம்

    ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

  • ஆளுநரே வெளியேறு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் உரையாற்ற தொடங்கினார். 'ஆளுநரே வெளியேறு' என சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

     

  • இபிஎஸ் வருகை 

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வளாகத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களும் வருகை தந்தனர். 

  • எதிர்கட்சிகளின் திட்டம் என்ன?

    ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்ப உள்ளன. சட்டம் ஒழுங்கு, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எதிர்கட்சிகள் இந்த கூட்டத் தொடரில் எழுப்ப தயாராக உள்ளதாக தெரிகிறது.

  • கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு திட்டம்

    தமிழ்நாடு பெயர் பிரச்னையை அடுத்து, ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆளுநர் உரை தொடங்கிய உடன் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link