TN Rain Live Update: கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

Fri, 19 Nov 2021-4:47 pm,

வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னை: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நேற்று காலை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலைகொண்டது. இது இன்று காலை கரையை கடந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. 


இந்த மாவட்டங்களைத் தவிர கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

Latest Updates

  • நாளை விடுமுறை:
    தொடர்மழை மற்றும் மழைவெள்ளம் காரணமாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை ( 20-11-21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மீனவர்களுக்கான எச்சரிக்கை:

     

  • கனமழை வாய்ப்பு:
    அடுத்த 4 நாட்களில் தமிழ் நாட்டின் கடலோரப் பகுதிகளில் தீவிர மழை இருக்கலாம்.

     

  • சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்:
    வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • மீனவர்களுக்கான எச்சரிக்கை:
    இந்திய நேரப்படி 11:00 மணி முதல் அடுத்த 6 மணி நேரத்திற்கு தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • அதிகபட்ச மழை பதிவு:
    கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் கணம் முதல் மிக கனமழை ஓரிரு இடங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது அதிக மழை ஐந்து இடங்களிலும் மிக கனமழை முப்பத்தி ஏழு இடங்களிலும் கனமழை அறுபத்தி ஆறு இடங்களிலும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோலியனூர் வல்லம் வளவனூர் மன பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகமா மழையாக 22 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது.

  • மழையைத் தொடர்ந்து ஷாக் கொடுக்கும் காய்கறி விலை

    சென்னை மாநகரில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மொத்த சந்தையில் ரூ.95 முதல் ரூ.100 வரை விற்பனையான தக்காளி, சில்லரை சந்தையில் ரூ.120க்கு விற்பனையானது. இது தவிர மொத்த சந்தையில் ரூ.65க்கு விற்கப்பட்ட கத்தரிக்காயின் விலை சில்லரை சந்தையில் ரூ.95 ஆக இருந்தது. காய்கறிகளின் விலை உயர்ந்ததால், சில்லரை கடைகளில் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

  • தமிழகத்தை மீண்டும் வெள்ளமா?

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. வட தமிழக கடலோர பகுதியில் கனமழை பெய்து வருவதால்,அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இது தொடர்பாக அணைகளை நிர்வகிக்கும் அமைப்புகளுக்கு மத்திய நீர் ஆணையம் (Central Water Commission (CWC)) அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

  • கரையை கடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, 19 நவம்பர் 2021 IST 0300-0400 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளைக் கடந்தது.

    “காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது; அது வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது” என தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

  • ரெட் அலர்ட் வாபஸ்

    சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நேற்று இரவு திரும்பப் பெறப்பட்டது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link