Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (ஜூன் 01, 2022)

Wed, 01 Jun 2022-8:03 am,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 01.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 


Latest Updates

  • மயிலாடுதுறை காவிரி புஷ்கர துலாக் கட்டத்திற்கு வந்து சேர்ந்த காவிரி நீர்: பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை காவிரி புஷ்கர துலாக் கட்டத்திற்கு வந்து சேர்ந்த காவிரி நீரை பொதுமக்கள் மலர்தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு காவிரி விகரமன் ஆறுகளின் தலைப்பு பகுதி கதவணைக்கு வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து, வினாடிக்கு 800 கன அடிநீர் திறந்து விடப்பட்டது. இந்தக் காவிரி நீரானது இன்று மதியம் மயிலாடுதுறை மாவட்ட உலக புகழ்பெற்ற புஷ்கர காவிரி துலாக் கட்டத்தை வந்தடைந்தது.

  • கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்: தமிழ்நாடு அரசு அரசாணை

    கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நலவாரிய உறுப்பினர் செயலாளராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டார். 

  • சங்கராபுரத்தில் டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் டாட்டா ஏசி வாகனத்தில் சுமார் 27 பேர் திருக்கனங்கூர் கிராமத்தில் உள்ள தங்கள் குலதெய்வம் சாமி கும்பிட சென்றபோது சங்கராபுரம்  ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே டாட்டா ஏசி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த டாட்டா ஏசில் பயணம் செய்த 27 பேர் படுகாயமடைந்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • கொரோனா பரவல்  எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

  • தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தலைமை செயலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த பொன்னுசாமி என்ற 72 வயது முதியவர் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    சுப்பிரமணி என்ற முன்னாள் ரயில்வே ஊழியர் 14 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பித் தராமல் அலைகழித்து வந்த நிலையில், காவல் துறையிலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தலைமைச் செயலகம் முன்பு தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.

  • பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் இணைய வழியில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நேற்று நடைபெற்ற பாஜக பேரணியில் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவுக்கு எதிராக கருத்துகள் பதிவு செய்பவர்களை தாக்குவேன் என பொதுவெளியில் கூறியது தொடர்பான புகார் அது.

    இன்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்ட விரோதமாக கூட்டம் கூடுவது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

  • தமிழக வானிலை நிலவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கேரளா, இலட்சத்தீவு அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் தடை இல்லை: பசுமை தீர்ப்பாயம்

    என்.எல்.சி.-யில் கூடுதல் அனல் மின் நிலையங்களை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை ரத்து செய்ய மறுத்த பசுமை தீர்ப்பாயம், என்.எல்.சி. நிறுவனத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் சில அறிவுறுத்தல்களையும் வழங்கியது.

  • யுஜிசி எச்சரிக்கை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் முழு நேர இயக்குனர் இல்லாதது, போதிய முழு நேர பேராசிரியர்கள் இல்லாதது, போதிய பேராசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் இல்லாதது, முறையான படிப்பு மையங்கள் அமைக்கப்படாதது தொடர்பான புகார்களின் எதிரொலியாக பல்கலைக்கழக மானியக் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

  • பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை சேவை திட்டங்களை விளக்கும் தமிழக பாஜக

    பாஜக கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை இன்று மதியம் 1 மணி அளவில், திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 8 ஆண்டு கால சாதனை சேவை திட்டங்களை விளக்குகிறார்.

  • 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு :விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
    தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில்  10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

     

  • பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 1, 2022) விலை
    சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 10ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

     

  • வேளாண் பல்கலைக்கழகத்தின் விருதைப் பெற தலைமைச் செயலர் மறுப்பு
    வேளாண் பல்கலைக்கழகத்தில் மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது தனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

     

  • கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  இன்று முதல் 2023 பிப்.2ம் தேதி வரை தினசரி 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.

  • அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து ம்உதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
    அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link