தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. சில காரணங்களால் உள்ளாட்சி தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்துவது இயலாது என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த மனுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தேர்வித்ததுடன் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டிம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில், இன்று சென்னை  ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வருகிற ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.