சென்னை: ஜுன் மாத இறுதியுடன் முடிவடையவிருந்த தமிழ்நாட்டில் முடியவிருந்த லாக்டவுன், ஏற்கனவே அமலில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்  ஜுலை 31ஆம் தேதி நள்ளிரவு 12 ம்ணி வரை தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் மாதம் முதல் தேசிய அளவில் லாக்டவுன் அமலில் உள்ளது.  தற்போது மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே லாக்டவுனை விதிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நிலையிலான ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளது.  தமிழக அரசின் அறிவிப்பின்படி, வழிபாட்டுத் தலங்களில் நிலவும் தடை தொடர்கிறது. அதேபோல் மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையும் தொடரும். வெளியூர் பயணிகள் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வதற்கான செல்வதற்கான தடையும் நீட்டிக்கப்படுகிறது. 


திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது. ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கான தடையும் நீடிக்கிறது.  இருந்தாலும், தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்படும் ஹோட்டல்களும், ரிசார்ட்டுகளும் இயங்கலாம்.


Also Read | டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை


பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப்படாது. ஆன்லைன் மூலமாகவே கல்வி பயில்வது தொடரும்.


வணிக வளாகங்கள் (Shopping Malls) திறக்கப்படாது. மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் இயங்காது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் ஜுலை மாதம் இறுதிவரை தொடங்கப்படாது. அரசியல் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.


Also Read | அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிரான இரானின் கைது வாரண்ட்டை நிராகரித்த இண்டர்போல்


திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், என அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களுக்கான தடையும் தொடர்கிறது.  இதுவரை இருந்தது போலவே ஜுலை மாதம் வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழுமையான் ஊரடங்குத் தொடரும்.