சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மெலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 


- கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


- சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 50 சதவிகித டோக்கன்களுக்கு அனுமதி 


- அரசு அலுவலகங்களில் 30 % பணியாளர்கள் பணிக்கு வரலாம்.


- மீன் கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.


- தொற்று குறைவான பகுதிகளில் காய்கறி, மளிகை கடைகள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.


- 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஹார்ட்வேர் கடைகள், மெக்கானிக் கடைகள், புத்தக விற்பனையகங்கள் செயல்பட அனுமதி.


- கட்டுப்பாடுகளற்ற இடங்களில் ஆட்டோக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.


- சுயதொழில் செய்பவர்கள் ஈ-பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கலாம்.


- டாக்சிகளில் மூன்று பயணிகள் மற்றும் ஆட்டோக்களில் 2 பயணிகளுக்கு அனுமதி உண்டு.


ALSO READ: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா... இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்


முன்னதாக, கொரோனா தொற்றின் (Coronavirus) இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே மாநிலம் முழுவதும் நிபந்தனைகளற்ற ஊரடங்கு (Lockdown) ஜூன் 7 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு இப்போது 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடனும், மற்ற இடங்களில் சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சற்று முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 


கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வந்த நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து தற்போது தொற்றின் தீவிரம் குறைந்துகொண்டு வருகிறது. தமிழகத்திலும் 36,000-ஐத் தாண்டிச்சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பல ஆலோசனைகளை நடத்தினார். 


தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவியதை அடுத்து, மே மாதம் 10 ஆம் தெதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், தொற்று பாதிப்பில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாததாலும், மக்களில் பலர் பொறுப்பற்று தெவையின்றி வீதிகளில் அலைந்ததாலும், ஊரடங்கு இன்னும் தீவிரமாக்கப்பட்டது. மே 31 ஆம் தேதி வரை அமலில் இருந்த தளர்வுகளற்ற ஊரடங்கு, தொற்று பரவலை தடுப்பதன் பொருட்டு ஜூன் 7 ஆம் தெதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கால் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான விளைவுகள் காணக்கிடைத்துள்ளன.


ALSO READ: இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR