கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்

கோயம்பத்தூர் மருத்துவனமை ஒன்றில் கொரோனா வார்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். கவச உடையில் அங்கு சென்ற மு.க.ஸ்டாலின் நோயாளிகளிடம் அவர்களது நிலையைப் பற்றி கேட்டறிந்தார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2021, 10:24 AM IST
  • கோவை மாவட்டத்தில் கொரோனா நிவாரணப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
  • கவச உடை அணிந்து முதல்வர் தங்களைக் காண வந்ததால் நோயாளிகள் நெகிழ்ச்சி.
  • அவர் வந்தது உற்சாகத்தை அளிக்கிறது- நோயாளிகள்.
கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள் title=

கோவை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க முழு முனைப்புடன் பல வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நிவாரணப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

அந்த வகையில், கோயம்பத்தூர் மருத்துவனமை ஒன்றில் கொரோனா வார்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். கவச உடையில் அங்கு சென்ற மு.க.ஸ்டாலின் நோயாளிகளிடம் அவர்களது நிலையைப் பற்றி கேட்டறிந்தார். 

முன்னதாக, சென்னையில் (Chennai) மிக அதிகமாக இருந்த தொற்றின் அளவு கடந்த ஒன்பது நாட்களாக குறைந்து வருகிறது. எனினும், கோயம்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், நேற்று கோவை சென்று அங்குள்ள தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.  

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடந்த ஆய்வின் போது, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்திக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார். எனினும், இதற்கு ஒப்புக்கொள்ள முதலில் அதிகாரிகள் தயங்கினர். தொற்று பரவலுக்கான அபாயத்தால் அதிகாரிகள் இடையே அச்சம் இருந்தது.  நோயாளிகளை காண முழு கவச உடையான PPE Kit அணிந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும். எனினும், அதை அணிந்து கொண்டு நோயாளிகளை பார்க்க தயாரான முதல்வர் அவர்களை சந்தித்தே தீர வெண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு முழு கவச உடை வழங்கப்பட்டு அவர் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

கவச உடை அணிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அங்குள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சாதாரண சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் ஸ்டாலின் நலன் விசாரித்தார். அங்கு அவர்களுக்கான சிகிச்சை சரியாக இருக்கிறதா, வசதிகள் நல்ல முறையில் இருக்கிறதா, ஏதேனும் குறை உள்ளதா என அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

ALSO READ: COVID-19: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று நேரடி ஆய்வு..!

முதலமைச்சர் தங்களைக் காண கவச உடை அணிந்து வந்ததை பார்த்த நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கள் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையால் சிலர் உணர்ச்சிவசப்பட்டனர். முதல்வர் தனது உயிரையும் துச்சமென மதித்து தங்களை பார்க்க வந்தது தங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக நோயாளிகள் தெரிவித்தனர். அவரது வருகை தங்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும்,  மருத்துவமனையில் தங்களுக்கு எந்த குறையும் இல்லை என்றும் நோயாளிகள் மேலும் தெரிவித்தனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா (Coronavirus) வார்டில் மேற்கொண்ட ஆய்வின் போது, அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் அமைச்சரின் தனி செயலாளர் உமாநாத், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் ஆகியோரும் முழு கவச உடை அணிந்து உடன் இருந்தனர். 

இந்தியாவில் இதுவரை வேறு எந்த மாநில முதல்வரும் கொரோனா வார்டுக்கே சென்று நோயாளிகளை பார்த்து நலன் விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ஈரோடு சென்ற முதல்வர் பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். மேலும், 20 கார் ஆம்புலன்ஸ் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் ஒற்றை நாள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அதை மேலும் குறைக்க தமிழக அரசு முழு முனைப்புடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே மாநிலம் முழுவதும் நிபந்தனைகளற்ற ஊரடங்கு இருந்த நிலையில், இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படும் என மே 28 ஆம் தெதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன் படி, தமிழ்நாட்டில் ஜுன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் தொடங்கியதுது. ஊரடங்கு தொடர்ந்தாலும், இந்த ஊரடங்கில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ: நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்: வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News