CoWIN in Tamil: இரு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ் மொழியும் இடம்பெறும்: மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு செய்யும் தளமான கோவினில் தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழக அரசு இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்த போர்டலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 5, 2021, 06:32 AM IST
  • கோவின் போர்ட்டலில் தமிழ் இடம்பெறாதது குறித்து பல கண்டனங்கள் எழுந்தன.
  • இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • விரைவில் தமிழில் கோவின் தளத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்.
CoWIN in Tamil: இரு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ் மொழியும் இடம்பெறும்: மத்திய அரசு விளக்கம் title=

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் சற்றே குறைந்து வருகிறது. தடுப்பூசி செயல்முறையும் முழு முனைப்புடன் நடந்து வரகிறது.

முதலில் தயங்கி வந்த மக்கள் தற்போது ஆர்வமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர். முன்னதாக, கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் கோவின் போர்டலில் (CoWIN Portal), மக்கள் வசதிக்காக சில இந்திய மொழிகளும் சேர்க்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், கோவின் போர்ட்டல் (CoWIN Portal) இந்தி மற்றும் பிற 10 பிராந்திய மொழிகளில் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் ஜூன் 4 வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த பிராந்திய மொழிகளில் ஆங்கிலம் தவிர மலையாளம், தெலுங்கு, மராட்டியம், பஞ்சாபி, குஜராத்தி, அசாமி, கன்னடம், பெங்காலி, ஒடியா ஆகிய மொழிகள் இடம் பெற்றிருந்தன. 
ஆங்கில மொழி ஏற்கனவே வலைத்தளத்தின் அறிவுறுத்தலின் ஊடகமாக இருந்தது. 

இதை அடுத்து, கோவின் போர்ட்டலில் தமிழ் இடம்பெறாதது குறித்து பல கண்டனங்கள் எழுந்தன. கொரோனா தடுப்பூசி செலுத்தலுக்கு பதிவு செய்யும் தளமான கோவின் போர்ட்டலில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் கோவின் போர்ட்டலில் தமிம் மொழியும் சேர்க்கப்படும் என மத்திய அரசு விளக்கமளித்தது.

ALSO READ: CoWIN போர்ட்டலில் புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அம்சம் அறிமுகம்; விபரம் உள்ளே

கொரோனா தடுப்பூசி (COVID Vaccination) செலுத்த பதிவு செய்யும் தளமான கோவினில் தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழக அரசு இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்த போர்டலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், கோவின் தளத்தில் மக்கள் வசதியை கருத்தில் கொண்டு பல மொழிகள் சேர்க்கப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் இதில் தமிழும் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவின் தளம் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் இரு நாட்களில் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவின் தளத்தில் தமிழ் மொழி இடம் பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், ,"தமிழ் மொழி  இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு தமிழ்வழியில் 'கோவின்' இணைய வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

தற்போது மத்திய அரசும் (Central Government) இது குறித்த விவரத்தை தெளிவு படுத்திய நிலையில், விரைவில் தமிழில் கோவின் தளத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்!!

ALSO READ: இனி Corona vaccine ஐ இந்த App இல் பதிவு செய்யலாம், இங்கே முழுமையான விவரம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News