சென்னை: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் மாநில அரசு அமல்படுத்திய ஊரடங்கு, ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, நீண்ட ஊரடங்கால் மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்வதில் சுணக்கம் ஏற்படலாம் என்பதால் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை கோயம்பேடு காய்கறி சந்தை அங்காடி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.


பகல் 12 மணி வரை இந்தக் கடைகள் இயங்க  மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, மாநிலத்தில் லாக்டவுன் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை (ஞாயிற்றுக் கிழமை) சந்தை வழக்கம் போல் இயங்கும் என கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.


Also Read | CM Stalin: சிங்கப்பூர் Oxygen Cylinders 8 மாவட்டங்களுக்கு விநியோகம்


“பொது மக்களின் வசதியை முன்னிட்டு அன்றாடம் காய்கறி, பழங்களை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். நியாயமான விலையில் விற்பனையாகும் இந்த ஏற்பாட்டுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப நாளுக்கு நாள் காய்கறி விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வருகிற 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு சந்தை வழக்கம் போல இயங்கும்” என அங்காடி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


தளர்வுகளற்ற ஊரடங்கு தற்போது மாநிலத்தில் அமலில் இருக்கிறது. எனவே, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் அன்றாடம் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் பணியை அரசே ஏற்று நடத்துகிறது. 


Also Read | Colombo Ship fire: தணிந்தது தீ, எண்ணெய் கசிவு இல்லை


மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், வணிகர் சங்கங்கள் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்கின்றன. இதற்காக மொத்த வியாபாரம் நடைபெறும் சந்தைகளில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.


சென்னையில் கோயம்பேடு சந்தையில் இந்த தளர்வு கொடுக்கப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மொத்த சந்தைகளுக்கும் இது நீட்டிக்கப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Also Read | Covid Vaccine: 12-15 வயதினருக்கு  தடுப்பூசி போட ஐரோப்பிய மருந்து அமைப்பு அங்கீகாரம்


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR