மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை : மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் (மார்ச் 20) வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் அறிவித்துள்ளார். கட்சி தலைவர் கமலஹாசன் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார். 


தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக முக்கிய கட்சிகள் தயாராகி வருகிறது. தமிழகத்தின் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் அனைத்தும்  மக்களவை தேர்தல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேற்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். 


இதை தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்  பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20 ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.