நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை சந்தித்தோம். அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக தேமுதிக இடம் பெரும். ஏற்கனவே கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளும் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். 


தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருந்தவர். அவரது கட்சிக்கு கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். மறுபக்கம்  டிடிவி தினகரனுடன் விஜயகாந்த் இணைவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


இந்தநிலையில், இன்று தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கூட்டணி ,குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. என்ன விதமான நிலைபாட்டை விஜயகாந்த எடுக்கப்போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவை தொகுதியுடன்,  21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் சில இடங்களை கேட்கலாம் என கூறப்படுகிறது. இன்றோ அல்லது நாளையோ முக்கிய அறிவிப்பை தேமுதிக வெளியிடும் எனத் தெரிகிறது.