பேச்சை நிறுத்த சொன்ன பறக்கும்படை, வேட்பாளருக்கு வாந்தி, மயக்கம்: பிரச்சாரத்தில் பரபரப்பு
Lok Sabha Elections: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் ஆதரித்து கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம் கோவை, சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் திங்கள் அன்று இரவு நடைபெற்றது.
கோவை: நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடும்பவனம் கார்த்திக் 10 மணிக்கு பிறகு 5 நிமிடங்கள் உரையாற்றியதால் உடனடியாக பேச்சை நிறுத்துமாறு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து வேட்பாளர் கலாமணி ஜெகநாதனுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூரில் நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பவனம் கார்த்திக் பிரச்சார நேரத்தை கடந்து பேசியதால் தேர்தல் பறக்கும் படையினர் பேச்சை நிறுத்துமாறு கூறினர். அப்போது வேட்பாளர் கலாமணி ஜெகநாதனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறி நிர்வாகிகள் காரில் ஏற்றிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் ஆதரித்து கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம் கோவை, சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் திங்கள் அன்று இரவு நடைபெற்றது. இதில் இடும்பவனம் கார்த்திக் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாற்றி கலாமணி ஜெகநாதனுக்கு வாக்கு சேகரித்தார். இரவு 10 மணியை தாண்டியும் இடும்பவனம் கார்த்திக் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி அகிலாண்டேஸ்வரியுடன் வந்த தேர்தல் பறக்கும் படையினர் இடும்பாவனம் கார்த்திக்கின் பேச்சை நிறுத்துமாறு அங்கிருந்த நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கூறினர். அப்போது அண்ணாமலை குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரைக் கண்டு கொள்ளாதவர்கள் தற்போது எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள், வழக்கு போட முடிந்தால் போடுங்கள் என அவர் பேசினார்.
மேலும் படிக்க | கரெக்ட் ரூட்டில் செல்லும் கதிர் ஆனந்த்..! வேலூரில் மகுடம் சூடுவாரா? கள நிலவரம்!
இதன் பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பாதியிலேயே பேச்சை நிறுத்திய இடும்பவனம் கார்த்திக் மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது இடைவிடாது காலையிலிருந்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் திடீரென வாந்தி மயக்கம் ஏற்படுவதாக கூறினார். இதையடுத்து அவர் உடனடியாக கட்சி நிர்வாகிகளுடன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் கேட்டபோது, தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள நேரத்தை தாண்டி 5 நிமிடங்கள் நாம் தமிழரை சேர்ந்த இடும்பவனம் கார்த்திக் உரையாற்றியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமா என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு - உதயநிதி ஸ்டாலின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ