கரெக்ட் ரூட்டில் செல்லும் கதிர் ஆனந்த்..! வேலூரில் மகுடம் சூடுவாரா? கள நிலவரம்!

தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வேலூர் தொகுதியில் என்ன நிலவரம்? கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை காணலாம்.   

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2024, 11:12 AM IST
  • வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த்.
  • பாஜக சார்பில் ஏ.சி.சண்முகன் போட்டி.
  • அதிமுக சார்பில் பசுபதி போட்டியிடுகிறார்.
கரெக்ட் ரூட்டில் செல்லும் கதிர் ஆனந்த்..! வேலூரில் மகுடம் சூடுவாரா? கள நிலவரம்! title=

வேலூர் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சீட் ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் ஏ.சி.சண்முகன், அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள். அதிக அளவு முஸ்லிம்கள் இந்த தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.  அதே நேரம் பாஜக தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த ஆண்டு வெல்வோம் வேலூரை என்ற தலைப்பில் பாஜக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியது. ஆனால் அது கவனம் ஈர்க்கவில்லை. வேலூரில் பாஜகவுக்கு மவுசு இல்லை.  

மேலும் படிக்க - தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறு

வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி,சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.  சிறுபான்மையினர்களின் ஓட்டை வழக்கம் போல திமுக பெற்றுவிடும்.   பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அதனால் அந்த பகுதிகளை கவர்ந்து வாக்கு வங்கியை பெற மும்முரமாக கதிர் ஆனந்த் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்,  ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த்  வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  வேலூர் திமுக கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல. 

வேலூரில் முதலியார்கள், வன்னியர்கள், முஸ்லிம்களின் வாக்குகள் அதிகம். கதிர் ஆனந்த் வன்னியர் என்பதால், சாதி ஓட்டு அவர் பக்கம் செல்லலாம்.  அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது.  வேலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. அதனால் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை ஒருக்கிணைக்க பவர்புல் திமுக நிர்வாகிகளை தலைமை களம் இறக்கியுள்ளது. 

திமுக இப்படி என்றால், அதிமுக நிலைமை அங்கு சரியில்லை. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. அதனால் மும்முனைப் போட்டி என்பதை விட, திமுக - பாஜகவுக்கு இடையே தான் வேலூரில் போட்டி.  தனது வெற்றியை கதிர் ஆனந்த் தொடர்வாரா என்பதை ஜூன் 4-ம் தேதி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க - தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News