சென்னை மதுரவாயலில் வசித்து வந்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து சோலார் பேனல்களை லாரியில் ஏற்றிக்கொண்டு ஒரிசா மாநிலத்திற்கு புறப்பட்டார். 


அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது இளைப்பாறுவதற்காக ரோட்டின் ஓரம் லாரியை நிறுத்திவிட்டு நாகராஜன் டீ குடிக்க சென்றுள்ளார்.


அப்போது அவ்வழியாக வந்த 4 பேர் நாகராஜனிடம், தாங்கள் குற்றப்பிரிவு போலீஸ் என்று கூறி பேசினர். மேலும், உன் மீது சந்தேகம் இருக்கிறது எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்டுள்ளனர். 


இதையடுத்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட அவர்கள் நாகராஜனிடம், லாரியிலுள்ள சரக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். 


மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன் 


உடனே நாகராஜன் ஆவணங்களை எடுத்து அவர்களிடம் காண்பித்தார். அதற்கு அவர்கள் போலியான ஆவணங்கள் என்று கூறி வழக்கு போட போகிறோம். அதற்கு பணம் கொடுத்தால் வழக்கு போட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.


அதற்கு நாகராஜன் பணம் இல்லை என்று தெரிவித்ததால் 4 பேரும் அவரை தாக்கி அவரிடமிருந்த 1,100 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார். 


இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்பொழுதுதான் அவர்கள் போலீஸ் போன்று நடித்தார்கள் என்பது தெரியவந்துள்ளது. 


இது குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த 4 பேரையும் பிடிப்பதற்கு இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டன.


மேலும் அந்த நான்கு பேரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படி மூன்று நபர்கள் சுற்றி வந்தனர். 


உடனே தனிப்படை காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் ஆத்துப்பாலம் பகுதியில் வசித்த 43 வயதுடைய முகம்மது அலி, 40 வயதுடைய பாஷா, 36 வயதுடைய சம்சுதீன் என்பதும், போலீஸ் போல நடித்து பணத்தை பறித்து சென்றதும் இவர்கள் தான் என்பதும் தெரியவந்துள்ளது. 


இதையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசார் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் படிக்க | அடேங்கப்பா; நெருப்பில் ஸ்டண்ட் செய்த மணமக்கள்; வாயைப் பிளத்த நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR