Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2022, 06:03 PM IST
Viral Video: அட இது  நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன் title=

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. 

குரங்கில் இருந்து பிறந்தவன் தான் மனிதன் என கூறப்படும் நிலையில், குரங்கு மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு விலங்கு என்று நம்பப்படுகிறது. இதன் குறும்புத்தனமான செயல்கள், நம்மை புன்னகைக்க வைக்கின்றன. சில சமயங்களில் அவை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. 

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், குரங்கு செய்யும் குறும்பு நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், கூட்டமாக இருக்கும் குரங்குகளையும், அது வீடியோ ஒன்றை ரசித்து பார்ப்பதையும் காணலாம்.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

சில நொடிகள் வைரலாகி வரும் வீடியோவில், ஒருவர் உணவு உண்ணும்  குரங்குகளை தனது கேமராவில் படம் பிடித்ததைக் காணலாம். அந்த நபர் வீடியோவை எடுத்த பிறகு. அதை குரங்குகளுக்கு காண்பிக்கிறார். அந்த நபர் குரங்குகளிடம் காணொளியை காண்பித்த போது குட்டிக் குரங்கு ஒன்று மொபைலின் அருகில் ஓடி வருவதைக் காணமுடிகிறது. மொபைலை கையில் எடுக்க முயன்று, திரையில் முத்தமிட ஆரம்பிக்கிறது. அருகில் அமர்ந்திருந்த பெரிய குரங்கும் எல்லாவற்றையும் சீரியஸாகப் பார்க்க ஆரம்பிப்பதையும்  வைரலாகி வரும் வீடியோவில் காணலாம். தனது  வீடியோவை பார்த்து ஆச்சரியமும் வியப்பும் மேலிட குரங்கு குட்டியின் அந்த ரியாக்ஷன் நிச்சயம் பார்த்து ரசிக்க வேண்டியது தான்.

வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை, ஆனால் இது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் helicopter_yatra என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா... குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News