கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்
கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மிக குறைவான அளவிலே உள்ளதாக தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் பேட்டி
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் அவர்கள் தலைமையில், களப்பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப , பொறியியல் இயக்குநர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், பொது மேலாளர் இரா.இராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர் ஆர்.சிவமுருகன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் பேசியதாவது.,
மேலும் படிக்க | திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டிற்கு வந்தது! பழைய முனையம் முடங்கியது!
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருக்கிறேன். ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமான கோரிக்கையை தொழிலாளர்கள் வைத்திருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் 2002இல் வேலைக்கு சேர்ந்த போது அவர்களை நிரந்தரம் செய்யவில்லை. 2009க்கு பிறகு தான் காண்ட்ராக்ட் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. 2002 ல் வேலைக்கு சேரந்தவர்களையும் நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு மனிதாபிமானம் அடிப்படையில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
அவர்களது கோரிக்கை நியாயமான கோரிக்கை தமிழக அரசும் முதலமைச்சரும் இந்த விஷயத்தில் கவனம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மற்றவர்கள் வேலை செய்யும் போது நோய் தாக்குமா என்று தெரியாது. ஆனால் இவர்களை நோய் தாக்கக்கூடிய இடத்தில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பிஎஃப் தொகை எடுக்கிறார்களா இல்லையா என்பதை கூட தெரியாது ஈஎஸ்ஐ எடுக்குறாங்களா என்பதும் தெரியவில்லை இன்சூரன்ஸ் பல நபர்களுக்கு இல்லை தமிழக முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. நிரந்தர பணியாளர்களுக்கு 90% பிரச்சனை இல்லாமல் உள்ளது. கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் டைரக்ட் பேமெண்ட் சிஸ்டம் என்ற முறையை பயன்படுத்துகிறார்கள். அதே போல தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.
தேசிய ஆணையம் நாங்கள் மாநில ஆணையம் வேண்டும் என்று நாங்கள் கேட்டு வருகிறோம். ஏற்கனவே 7 மாநிலங்களில் இது இருக்கிறது. தமிழகத்திலும் அது போன்ற ஆணையத்தை கேட்கின்றோம் என கூறினார்.
தூய்மை பணியாளர்கள் அவர்கள் சொந்தமாக தொழில் செய்ய ஏதுவாக கர்நாடகாவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு எதற்கு ஏராளமாக நிதி வழங்கி வருகிறது. 50 லட்சம் ரூபாய் வரை அவர்கள் உதவி செய்வார்கள். குறைந்த வட்டியில் இந்த உதவி செய்யப்படுகிறது. 5 தூய்மை பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து கூட இதை பெற முடியும் என தெரிவித்தார்.
தமிழகத்திலம 2022ல் இருந்து ஊழியர்கள் வேலை விட்டு செல்லும் பொழுது ஒரு காலி பணியிடம் காண்ட்ராக்ட் ஆட்களிடம் கொடுக்க வேண்டும் என கூறி விடுகிறார்கள். இது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். 90% பேர் எஸ்சி எஸ்டி தான் இதில் பணியாற்றுகிறார்கள். 12 ஆயிரம் மட்டும் தான் அவர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இது இல்லை என்றால் 30 ஆயிரம் 40 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும் என தெரிவித்தார்.
இந்தியாவிலே கழிவுநீர் கால்வாயில் இறப்பவர்களில் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் இதையே கூறி இருப்பார். பல்வேறு திட்டங்களில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இந்த நிகழ்வு தமிழகம் பின்தங்கி இருக்கிறது.
இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்வை தமிழக அரசு அதிகமாக நடத்த வேண்டும். துப்புறவு பணியாளர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பெரிய கட்டிடம் மால்களில் பணியாற்றும் போது தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது தனியார் அமைப்பில் வேலை செய்யும் பொழுது தான் உயிரிழப்பும் அதிகமாக ஏற்படுகிறது ஆயிரம் ரூபாய் ஆயிரத்து 500 ரூபாய் வேலைக்கு சென்று உயிர் எழுப்பு ஏற்படுகிறது அவர்களுக்கு வருமானம் குறைவாக உள்ளதால் தான் அவர்கள் இதுபோன்று தனியார் அமைப்புகளில் வேலைக்கு செல்கின்றனர்.
கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் இயந்திரம் தமிழகத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளது குஜராத் டெல்லி கேரளா ஆகிய இடங்களில் இது போன்ற இயந்திரங்கள் அதிக அளவு இருக்கும் பொழுது தமிழகத்தில் மிக குறைவான அளவில் இந்த இயந்திரங்கள் உள்ளதாக கூறினார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் நபர்கள் கைகளில் கையுறை இல்லாமல் வேலை பார்க்கிறார்கள் அதற்கு அவர்கள் கூறும் காரணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது அவர்களுக்கு மாற்றாக ஐஐடி மாணவர்களிடம் பேசி வேறு வகையான கையுறைகளை தயார் படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | கார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
\