)
சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 வயதான அமென்ரா தீப்பர்மா, 33 வயதான சுகுமார் தீப்பர்மா ஆகிய மூவரும் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த உணவகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டி அருகே சுத்தம் செய்தபோது திடீரென தன்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததும் நிலைகுழந்து கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த உடன் பணிபுரிந்து வந்த அமென்ரா தீப்பர்மா, சுகுமார் தீப்பர்மா இருவரும் தன்குமாரை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதை பார்த்த சக ஊழியர்கள் உடனே மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மூவரையும் மீட்டு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூவரையும் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள்.
அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர். மேலும் மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார்கள்.
உயிரிழந்த தன்குமார் உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ