திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் தவற விட்ட தாலி செயினை மீட்டு தந்த சிப்பி சேகரிப்பு குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் மதுசூதனன், தனது மனைவி அங்கயற்கன்னியுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் வந்தார்.


ஆலயத்தில் முருகக்  கடவுளை (Lord Muruga) தரிசிக்க செல்வதற்கு முன்னதாக, சம்பிரதாயப்படி கணவனும், மனைவியும் கடலில் புனித நீராடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மதுசூதனின் மனைவி அங்கயற்கன்னி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின் கடலில் விழுந்து விட்டது.


நேற்று முன்தினம் முழுவதும் தேடியும், கடலில் விழுந்த தங்கச் செயின் கிடைக்கவில்லை. கணவன், மனைவி இருவரும் திருச்செந்தூரிலேயே விடுதியில் தங்கியிருந்தனர்.


Read Also | பழனியாண்டவனிடம் ஆட்டைய போட்ட ஊழியர்.. சிசிடிவி வடிவில் சிக்க வைத்த முருகன்


நேற்று, திருச்செந்தூரை சேர்ந்த ஜான் மற்றும் முருகன் ஆகியோர் தலைமையில் கடலில் முத்து குளிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் என சுமார் 50 பேர் தாலி செயினை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


வெகுநேரமாக தேடிய முத்துக் குளிக்கும் குழுவினர், தாலிச் செயினை கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் போலீசார் முன்னிலையில் மதுசூதனன் தம்பதியினரிடம் அவர்களுடைய தாலிச் செயின் ஒப்படைக்கப்பட்டது.


இதையடுத்து கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு குழுவினரை போலீசார், பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டினர்.


Also Read | கூட்டுறவு வங்கியில் ₹1 கோடி மோசடி; போலி நகைகளை வைத்த வங்கி காசாளர் கைது!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR