LPG Gas Cylinder Price Hike Latest: இன்று முதல் அதாவது செப்டம்பர் 1ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை. புதிய விலை உயர்வுக்குப் பிறகு சென்னையில் எல்பிஜி வணிக சிலிண்டர் விலை 1855 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,691.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பண வீக்கம் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த ஊரில் எவ்வளவு விலை உயர்வு


இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசிஎல்) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, மும்பையில் 19 கிலோ வணிக ரக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1605ல் இருந்து ரூ.1644 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.1764.50ல் இருந்து ரூ.1802.50 ஆகவும், சென்னையில் ரூ.1817ல் இருந்து ரூ.1855 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.


மேலும் படிக்க | அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்! சென்னையில் நடந்த தேசிய சைபர் பாதுகாப்பு மாநாடு!


கடந்த மாதமும் அதிகரிப்பு


முன்னதாக கடந்த மாதம் (ஆகஸ்ட் 2024) எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலைம் அதிகரித்தது. 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை 8.50 ரூபாய் உயர்ந்தது. கடைசியாக உயர்ந்த இந்த விலை மாற்றத்திற்குப் பிறகு, டெல்லியில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1652.50 ஆக இருந்தது.


ஜூலையில் விலை குறைப்பு 


விலை குறைப்பை பொறுத்தவரை கடந்த ஜூலை மாதம் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் எல்பிஜி விலையை குறைத்திருந்தன. இந்த நிறுவனங்கள் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்ததால்,  அப்போது டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.30 குறைக்கப்பட்டது. இந்த விலை மாற்றத்திற்கு பிறகு டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1676ல் இருந்து ரூ.1646 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1787க்கு பதிலாக ரூ.1756 ஆகவும், சென்னையில் ரூ.1840.50க்கு பதிலாக ரூ.1809.50 ஆகவும், மும்பையில் ரூ.1840.50 ஆகவும் இருந்தது. ஆனால் இப்போது சென்னையில் 1855 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனையாக உள்ளது.


மேலும் படிக்க | எம்ஜிஆரை தவிர எந்த நடிகரையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ