Nanguneri Issue: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்குநேரியில் நடந்த சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையை உடனடியாக எடுப்பது அவசியம் என்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் நாங்குநேரி சம்பவங்கள் போல் 15 சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் முக்கூடல், திசையன்விளை, சீவலப்பேரி, நடுக்கல்லூர், வீரவநல்லூர், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15க்கும் அதிகமான இடங்களில் சாதிய ரீதியாலான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதை பட்டியலிட்டார்.


திமுகவில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களை சாதிய ரீதியாக நியமித்ததில் இருந்துதான் சாதிய பாகுபாடுகள் தொடங்குவதாக கூறினார். தமிழகத்தில் சாதிய மோதல்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமே திமுக தான் என்றார். 


மேலும் படிக்க | நாங்குநேரி சாதிய தாக்குதல்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை என்ன தெரியுமா?


நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும், அவற்றை ஈடுகட்டவே இதுபோன்ற சாதிய பிரச்சினைகளை திமுகவே தூண்டிவிடுகிறது என்ற அவர், 'மாமன்னன்' படத்தில் ஃபகத் பாசில் பேசிய சில வசனங்களை அனுமதித்து ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். 'எங்கள் பரம்பரையே தாழ்த்தப்பட்ட மக்களை நிர்க்க வைத்து பார்ப்பதுதான்' என்ற வசனத்தை வைத்து நடித்த உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 


மேலும், நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என்றும் சாதிய மோதல்களை தூண்டி விட்டுள்ளதால் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஒரு மாணவன் ஆயுதங்களை பயன்படுத்தி சக பள்ளி மாணவனை தாக்கும் நிகழ்வை எளிதாக பார்க்கக் கூடாது என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். 


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்ளாக பூரண மதுவிலக்கு குறித்து அறிவிக்க வேண்டும் என்ற அவர்,
சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வரவில்லை என்றால் தமிழக டாஸ்மாக் கடைகள், மது ஆலைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்தார். மது கடைகளை குறைப்பதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த திமுக, மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்து வருவதாக கூறினார். 


நெடுஞ்சாலைகளில் உள்ள தாபா உணவகங்களில் மது விற்கப்பட வேண்டுமென்றால் அனுமதி வாங்கிக்கொண்டு விற்பனை செய்வது அவசியம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, மது கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமான செயல் எனவும் குற்றச்சாட்டினார்.


கடந்த ஆக. 9ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவர் ஒருவரையும், அவரின் தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சில மாணவர்களின் இந்த சாதியத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இதுவரை 6 சிறார்கள் கைது செய்யப்பட்டு, நெல்லை கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க | தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி சம்பவம்..! கொதித்தெழுந்த சினிமா பிரபலங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ