சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெயில் காணப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தண்ணீர் பற்றக்குறையும் நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற இடங்களில் அவ்வபோது மழை பெய்து வந்தாலும், சென்னையில் சுமார் 200 நாட்களுக்கு மழை என்பது பெயருக்குக் கூட பெய்யவில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால், சென்னைவாசிகள் தண்ணீர் பிரச்சனையால் திண்டாடி வருகின்றனர். 


சென்னையில் மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சனை ஓரளவு குறைக்கப்படும். மேலும் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனைக்கு அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் மக்கள் தண்ணீரின்றி அவதிக்குள்ளாகி உள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, வேறு எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது எனவும் நீதிபதிகள் கூறினார்.



மேலும், சென்னை உயர்நீதிமன்றம், ஜூன் 17 ஆம் தேதிக்குள், தமிழ்நாட்டின் தினசரி குடிநீர் தேவைகளை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் என்பதை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பிற இடங்களில் தமிழக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட உப்பு நீர்ப்பாசன நிலையங்களின் நிலை பற்றி HS கேள்வி எழுப்பியுள்ளது.