ஓபிஎஸ் மகன் எம்பி ரவீந்திரநாத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேர்தல் வழக்கில், தேனி மக்களவை தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் படிக்க | பீகார் எதிர்கட்சியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?
வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நடைபெற்றபோது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு தொடர்பாக சில விவரங்களை நீதிபதி கோரியிருந்தார்.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே தங்களது தரப்பு ஆவணங்களை சமர்பிக்க முடியும் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க முடியும் என ரவீந்திர நாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கோவை: திமுக ஓட்டளித்து பாஜக வேட்பாளர் அமோக வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ