கோவை: திமுக ஓட்டளித்து பாஜக வேட்பாளர் அமோக வெற்றி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுகவினர் வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2023, 07:22 AM IST
  • கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல்
  • பாஜகவுக்கு வாக்களித்த திமுக
  • பாஜக வேட்பாளர் அமோக வெற்றி
கோவை: திமுக ஓட்டளித்து பாஜக வேட்பாளர் அமோக வெற்றி title=

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் 100 மாநகராட்சி கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளில் உள்ள 196 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 511 கவுன்சிலர்கள் என மொத்தம் 824 உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர். ஊரக உள்ளாட்சியிலிருந்து 5 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 9 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியிட்டனர். அதிமுக, திமுகவில் தலா ஏழு, பாஜகவில் இரண்டு, கொ.ம.தே.க வில் ஒருவர் என மொத்தம் 17 மாவட்ட கவுன்சிலர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.

மேலும் படிக்க | பீகார் எதிர்கட்சியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?

பாஜக சார்பில் போட்டியிட்ட கோபால்சாமி 15 ஓட்டுக்கள் பெற்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கூட்டணி கட்சியாக அதிமுக இருந்தாலும், பாஜக இரண்டு, அதிமுக 7 என மொத்தம் 9 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருக்க முடியும். ஆனால் திமுகவில் ஐந்து பேரும், கொ.ம.தே.க-வில் ஒருவரும் வாக்களித்ததால் பாஜகவை சேர்ந்த கோபால்சாமி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவும் பாஜகவும் எதிரும் புதிருமான கட்சியாக இருந்தாலும், திமுகவினர் ஓட்டளித்து, பாஜகவினர் அமோக வெற்றி பெற்றிருப்பது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ராஜன் மட்டும் 9 ஓட்டுகள் பெற்று திட்டப்பணிக்குழு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், கந்தசாமி, சக்திவேல் பாஜகவின் ஆதரவோடு, தலா ஓன்பது ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். நான்கு வேட்பாளர்கள் எட்டு ஓட்டுக்கள் பெற்றதால், வெற்றியை அறிவிக்க குலுக்கல் முறையில் நான்கு வேட்பாளர்களின் பெயர்களும் போடப்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த பிரதீப் பெயர் வந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஐந்து இடங்களில் மூன்றில் அதிமுகவும், பாஜக, திமுக தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜக சார்பில் , போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபால்சாமி நம்மிடம் பேசுகையில், அதிமுக கூட்டணி என்பதால்,தேர்தலை சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிட்டதாக கூறினார். 15 ஓட்டுகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமல்லாமல், திமுகவினரும், கொங்குநாடு மக்கள் கட்சியினரும், தனக்கு வாக்களித்திருக்கின்றனர். வாக்களித்தவர்களுக்கு மனமார நன்றியை தெரிவித்தார்.

போட்டியிட்ட 9 பேரில் பழக்க வழக்கம், நட்பின் காரணமாக, கட்சி வித்தியாசமாக பார்க்காமல் திமுகவினர் தனக்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் மக்களுக்கு முடிந்தளவு சேவை செய்ய இருப்பதாக தெரிவித்தார். வருகிற 28 ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆஹோ... ஷர்மிளாவுக்கு குவியும் வேலைவாய்ப்புகள்... ஆதரவு கரம் நீட்டும் கனிமொழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News