கல்லை நட்டு பூஜைகள் செய்து சிலை என கூறும் மூடநம்பிக்கை அதிகரிப்பு - உயர்நீதிமன்றம் வேதனை
சாலையோரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லை அகற்ற தாசில்தாரருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து புகார் அளித்த போது, இது உரிமையியல் பிரச்னை என காவல் துறையினர் புகாரை முடித்து விட்டதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சாலையோரம் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக வேதனை தெரிவித்துள்ளார். சாலையோரம் நடப்பட்ட கல், சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் படிக்க | நாம் தமிழர் கட்சி 2024-க்குப் பிறகு இருக்காது, குறித்துக் கொள்ளுங்கள் - அண்ணாமலை
மேலும், இதற்காக வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என குறிப்பிட்டு, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், இறுதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்த அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை நாளைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரை விடுவித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தன.
வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்த விவரம், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை காத்திருப்பதாக தெரிவித்த நீதிபதி, விசாரணையை சற்று நேரத்திற்கு தள்ளி வைத்திருந்தார். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் விசாரணையை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை படித்துப் பார்த்து, அடுத்த கட்ட உத்தரவுகளை பிறப்பிப்பதாக கூறி, நேற்று இறுதி விசாரணைக்காக பட்டியலப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.
மேலும் படிக்க | தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடமில்லை: மதுரையில் ஓபிஎஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ