உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கௌசல்யாவின் தந்தைக்கு விடுதலை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர்(Shankar) ஆணவக்கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தைக்கு விடுதலை அளித்திருப்பது, தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட சக்தி-கவுசல்யா தம்பதியனருக்கு வாழ்த்துக்கள்: சத்யராஜ்...


முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு தெற்கு தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் குப்பமபாளையம் கிராமத்தை சேர்ந்த கௌசல்யா(Kausalya), தனது பெற்றோர் விருப்பத்தை மீறி சங்கர்(Shankar) என்பவரை சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டார். கௌசல்யாவின் கல்லூரி நாள் தோழரான சங்கர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இதன் காரணமாக கௌசல்சாவின் குடும்பத்தார் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு, கௌசல்யாவின் தந்தையான சின்னசாமி, தம்பதியரை வலுக்கட்டாயமாக பிரிக்க முயன்றார். கௌசல்யாவின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி அவரை திண்டுக்கலுக்கு அழைத்துச் சென்றார். இதனிடையே சின்னசாமி கூலிப்படை உதவியுடன் 2016-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து சங்கரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. 


சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 


உடுமலை சங்கர் கொவ்சல்யாவுக்கு சக்தியுடன் திருமணம்....


இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவித்தது. இந்த தீர்ப்பில், உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் தூக்கு தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.