பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி உத்தரவிடும் அதிகாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும், இது குறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆலையை மூடியது சட்டவிரோதம் என்றும், ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறப்பதற்கோ, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கோ, எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என இந்த வலக்கை ஒத்திவைத்தது. 
 
இதை தொடர்ந்து, இந்த வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பராமரிப்பு பணிக்காக ஆலையை அனுமதிக்கும்படி வேதாந்தா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இவ்வழக்கில் வைகோவை சேர்க்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. ஆலையைத் திறந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலை மூடப்பட்ட பின்னர், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் நிலத்தடி நீர், காற்றின் தரம் உயர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 


ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோவை சேர்க்கக் கூடாது என்று வேதாந்தா குழுமம் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.