ராகுல்காந்தி பாதுகாப்பு குறித்து பதில் அளிக்க 4 வாரம் கெடு!
கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் நாள் மாலை 6.10 மணியளவில் காலமானார்.
மறைந்த கலைசர் அவர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக கலைஞர் அவர்களின் உடல் வைக்கப்பட்டு இருந்தபோது, ராஜாஜி அரங்கம் வந்த ராகுல் காந்தி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக நீதி விசாரணை கோரி மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.
இன்று இந்த மனுவின் மீதான விசாரணை நடைப்பெற்றது. விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.