கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், நாடு முழுவதும், பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், நடவடிக்கைகளை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வகையில், ஊரடங்கை (Lockdown) மீறியவர்களிடமிருந்து இதுவரை, தமிழகம் முழுவதும் 17.84 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.


ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7,66,717 வழக்குக பதிவு செய்யப்பட்டுள்ளன.


அதே நேரம், மிகவும் தேவையான நேரங்களில் வெளியே வருபவர்களிடமும் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.


ALSO READ: மதுரையில் முழுஊரடங்கு மேலும் 2 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு..!


அவ்வகையில், மதுரையை (Madurai) சேர்ந்த ராமகிருஷ்ணன் (Ramakrishnan) என்ற ஆட்டோ ஓட்டுநர் (Auto Driver), பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண் ஒருவரை தனது ஆட்டோவில் (Autorickshaw) இலவசமாக அழைத்துச் சென்றதால் இக்கட்டில் மாட்டிக்கொண்டார். ராமகிருஷ்ணன் பிரசவ வலியால் அவதியுற்ற அப்பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருக்கிறார். அப்போது கோரிப்பாளையம் சிக்னலில் அவரை சில போலீசார் வழிமறித்துள்ளனர். அவர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக அவருக்கு 500 ரூபாய் அபராதம் (fined) விதித்துள்ளனர். தான் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே வெளியே வந்ததாக அந்த ஆட்டோகாரர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை.


இதனால மிகவும் மன வேதனை அடைந்த அவர் இது குறித்த ஒரு வீடியோவை வாட்ஸாப்பில் வெளிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதைப் பார்த்துவிடு, அந்த ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொண்ட மதுரை மாநகர காவல் ஆணையர் (Madurai Police Commissioner) பிரேம் ஆனந்த் சின்ஹா (Prem Anand Sinha), நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததோடு அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.