கீழடி உண்மையை மறைப்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம் - கார்த்தி சிதம்பரம்
கீழடி அகழாய்வு களை திட்டமிட்டு மறைப்பது தான் ஒன்றிய அரசின் எண்ணம் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கீழடி அகழாய்வு களை திட்டமிட்டு மறைப்பது தான் ஒன்றிய அரசின் எண்ணம் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
இந்திய வரலாற்றை இந்துத்துவ அடிப்படையில் பார்ப்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் அதனால்தான் கீழடியில் அகழாய்வு மூலம் உண்மைகள் வெளி வந்துவிடக் கூடாது என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம். கச்சா எண்ணெய் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நூறு டாலராக இருந்தது. அப்போது இருந்த பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக தான் இருந்தது. ஆனால் இப்போது 74 டாலராக தான் இருக்கிறது இப்போது ஒன்றிய அரசின் வரிவிதிப்பின் மூலமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.
ALSO READ : உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும் - விஜயகாந்த்
இந்த வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் மத்திய அரசுக்குத்தான் செல்கிறது. பணமதிப்பு நீக்கத்தின் மூலமாக தான் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது உண்மை.
இந்திய பொருளாதாரத்தில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு பல நூறு கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு இதுவரை வழங்கவில்லை மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக நிதியமைச்சர் போன்றவர்களை சேர்க்கவில்லை இந்திய ஜனத்தொகையில் 6% தான் தமிழ்நாட்டுக்கு.
ஆனால் இந்தியாவில் 12 % மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை, மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது. ஆனால் சட்டப்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும்.
"ஆளுநர் ஆட்டு தாடி போன்றவர், அவரால் எந்த பயனும் இல்லை என்று அறிஞர் அண்ணா கூறுவார்.
புதிய ஆளுநர் நாகாலாந்து மாநிலத்தில் இருந்த போது அங்கு பிரிவினைவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அவரை இங்கு மாற்றி இருக்கிறார்களே ஒழிய வேறு ஒன்றும் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை.
ALSO READ : Local Body Election: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி - காட்சிகள் மாற வாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR