2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், 2024 ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக  நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் தமிழ்நாட்டில் இருக்கும்  மொத்தமுள்ள 39 தொகுதிகளில் மதுரை மக்களவைத் தொகுதி (Madurai Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்திய பகுதி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன. 


மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளரான டாக்டர் சரவணனன், பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேராசிரியை சத்யா தேவி ஆகியோர் போட்டியிட்டனர்.


மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சு.வெங்கடேசன் 192088 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளரான டாக்டர் சரவணனன் 93217 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் 90790 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேராசிரியை சத்யா தேவி 41089 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.


மதுரை மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர் விபரம்


மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 15,82,271             
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை - 7,77,145             
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை - 8,04,928             
 மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை -198   


மதுரை மக்களவை தொகுதியில், இதுவரை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை தலா ஒருமுறை  வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் எட்டு முறையும், அதற்கு அடுத்ததாக இடதுசாரி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.


மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ