யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேர்வுசெய்யப்பட்ட மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
International Day of Yoga 2022: தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.
சென்னை: இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு 100 நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் (Morarji Desai National Institute of Yoga), ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து 2022 யோகா மஹோத்சவத்தினை உலகெங்கும் நடத்திவருகின்றன. உலக யோகா தினத்தை முன்னிட்டு 100 நாட்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகா-வின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதில் யோகா ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் யோகாவை பெருமைப்படுத்துகின்றனர். பொதுமக்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா
தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.
சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா 28-04-2022 அன்று நடைபெறுகிறது. அதில் பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் படிக்க: COVID குணமானபிறகு உடல்நலனை மேம்படுத்தும் யோகாசனங்கள்
இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளம் வாயிலாக கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலைசிறந்த யோகிகளால் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைய வழியின் மூலம் கலந்து கொள்ளலாம்: - https://forms.gle/kCiDpjTv11dDgJb96
இதற்கான ஏற்பாடுகளை நிகர்நிலை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் வெகு விமரிசையாக செய்து வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR